உங்கள் குழந்தை விளையாட்டுக்கு அடிமையா?

மாலை முழுதும் விளையாட்டு - என்பது பாரதியின் வாக்கு, ஆனால் சில குழந்தைகளுக்கு நாளின் எல்லா நேரமும் மாலைநேரம்தான். இது சரியா?

By காயத்ரி சிவக்குமார்  • 8 min read

உங்கள் குழந்தை விளையாட்டுக்கு அடிமையா?

விளையாடும் பழக்கம் நல்லதுதான் என்றாலும் அதுவே அளவுக்கு அதிகமாய் போகும்போது சில பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். படிப்பில் கவனம் குறைவது என்பதுதான் பெரும்பாலான பெற்றோர் எதிர்நோக்கும் மிக முக்கியமான பிரச்சனை.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படாமல் இருப்பதால் இது ஒரு சமூக பிரச்சனையாகவும் பெற்றோரால் எதிர்கொள்ளப்படுகிறது. ‘விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் தம் பிள்ளைகள் அனைவருமே பரிசு பெற வேண்டும்; சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை உடனடியாக பெற வேண்டும், கூடவே அவர்கள் படிப்பிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்றே பெரும்பாலான பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இது எல்லோருக்கும் நிகழ்ந்துவிடுவதில்லை.

இவை வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுக்கள் அல்லது வெளியில் சென்று விளையாடும் விளையாட்டுக்கள் என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பிரச்சனை என்னவென்றால், எந்நேரமும் விளையாடிக்கொண்டே இருப்பதுதான்.

விளையாட்டில் ஒரு குறிப்பிட்ட துறையைத் தேர்ந்தெடுத்து அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு விளையாடுவது என்பது ஒரு சரியான பாதை. ஆனால் நாம் இப்போது பேசவிருப்பது- எல்லாவிதமான விளையாட்டுக்களையும் நேரம்காலம் பார்க்காமல் விளையாடும் குழந்தைகள் அல்லது சிறார் குறித்துதான். இவர்களின் இலக்கு, எப்போதும் விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

வெளியில் போய் விளையாடும் எண்ணம் கொண்ட சிறுவர்கள் சிலர் காலையிலேயே எழுந்து எதையும் சாப்பிடக்கூட செய்யாமால் ஒரு கிரிக்கெட் பேட்டையோ அல்லது டென்னிஸ் பேட்டையோ தூக்கிக் கொண்டு ஓடி விடுவர். பசி, தாகம், வெயில் எதையும் அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.

இப்போது இருக்கும் சூழலில் சிறார் மீதான வன்முறைகள், குற்றங்கள் போன்றவை அதிகமாக பரவியுள்ளன. வெளியே சென்ற அவர்கள் திரும்பி வரும் வரையில் பெற்றோருக்குக் கவலைதான். தங்கள் மீதான பாதுகாப்பு குறித்த அக்கறை அவர்களுக்கு இருப்பதில்லை.

பிள்ளைகள் விளையாட்டின் மீதுள்ள கவனம் காரணமாக படிப்பு, சாப்பாடு, தூக்கம், குடும்பம் என அனைத்தையும் விட்டு விலகிச் செல்கின்றனர். விளையாட்டுத்தோழர்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதனால் பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளி அதிகரிக்கிறது.

பகல் நேரத்திலோ அல்லது மதிய நேரத்திலோ வெளியில்,வெயிலில் விளையாடும்போது சூரியனிடம் இருந்து வரும் புறஊதாக் கதிர்கள், வாகனங்களின் புகை, சுற்றுச்சூழல் மாசுபாடுகள் இவற்றால் பாதிப்பு ஏற்படுகின்றன. இதனால் தேவையற்ற நுரையீரல் சம்பந்தமான மற்றும் தோல் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

பொதுவாக வெளியே சென்று அதிக நேரம் விளையாட வேண்டாம் என்று சொல்லும் பெற்றோர் அதைக் கட்டுப்படுத்த முயல்கின்றனர். அதேநேரத்தில் கூடுமானவரை அவர்களுடன் நேரத்தை செலவிடுதல், வேறு விஷயங்களில் அவர்களது கவனத்தை கொண்டு செல்லுதல், புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துதல், பல்வேறு புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற மாற்று ஏற்பாடு எதுவும் அவர்களுக்கு அளிப்பது இல்லை. 

மாலை நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 2 அல்லது 3 மணிநேரங்கள் விளையாடினாலே போதுமானது. முடிந்தால் பெரியவர்கள்கூட அவர்களுடன் சேர்ந்து விளையாடும் போது பெரியவர்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

உங்கள் குழந்தை விளையாட்டுக்கு அடிமையா?

இணைய விளையாட்டுக்கள்

உலகம் முழுவதற்குமான விளையாட்டுச் சந்தையின் அளவு மிகவும் பெருகி விட்டது. விளையாட்டுத்துறை சந்தையில் பணத்தை முதலீடு செய்பவர்கள் பல்வேறு வழியான சந்தை உத்திகளின் மூலம் தமது வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்கின்றனர். இதற்காக வெவ்வேறு வகையான சந்தைப்படுத்தும் உத்திகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறு விரிக்கப்படும் வலையில்தான் இது போன்ற சிறுவர்கள் சிக்கிக் கொள்கின்றனர்.

சமீபத்தில் ஒரு பத்திரிகைச் செய்தி ஒன்றை பார்க்க நேர்ந்தது. இணையத்தில் வெளியிடப்படும் விளையாட்டுக்களை விளையாடிக் காண்பிப்பதற்கு என்றே ஒரு யூ ---டியூப் சேனல் துவங்கி, அதன் மூலம் அவர் கோடீஸ்வரர் ஆன கதை அது.

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய நோய்களின் வரிசையில் ‘Game Disorder விளையாட்டு நோய் என்ற ஒரு புதிய வகை நோயைத் தனது பட்டியலில் சென்ற ஆண்டு இறுதியில் சேர்த்துள்ளது. இப்போது யோசித்தால் இதன் வீரியம் உங்களுக்குப் புரியக்கூடும்.

வளரிளம் பருவத்தின் போது உடலில் ஏற்படும் உயிரியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் விளையாட்டுகள் மீது ஆர்வம் ஏற்பட ஒரு முக்கிய காரணியாக விளங்குகின்றன. இதுபோன்ற ஆர்வங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஆனால், இவை எல்லாவற்றின் இறுதியான விளைவாக படிப்பில் நாட்டம் குறைவது, அதீத கோபம், எரிச்சல் , தற்கொலை / கொலை எண்ணங்கள் போன்ற இந்த விஷயங்கள் நம் கைமீறிப் போகக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் அதீத செல்லம், கண்டிப்பில்லாத வளர்ப்பு முறை, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கவனக்குறைவு போன்றவை அவர்களை இவ்விதமான பாதைக்குக் கொண்டு செல்லும்.

சிறு குழந்தைகள் முதல் வளரிளம் பருவத்தினர் வரை இந்த பாதிப்பு உள்ளதால் அவர்களை மிகவும் கவனமாக இதிலிருந்து மீட்க முயல வேண்டும். இவர்களது திறமையைச் சரியான வழியில் கொண்டு சேர்ப்பதே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக இருக்கும்.

என்ன செய்யவேண்டும்?

சற்றே வளர்ந்த மற்றும் வளரிளம் பருவத்தினராக இருந்தால்...

என்ன தேவை? எதை நோக்கி அவர்கள் செல்ல வேண்டும்? என்பது குறித்த வழிகாட்டல்களை அவர்களுக்குப் புரியும் விதத்தில் சரியான முறையில் அளிக்கவேண்டும்.

விளையாட்டுக்கும் தேவையான போதுமான அளவு நேரத்தைத் திட்ட வேண்டும். அதற்கான பயிற்சிகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

சிறு வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்லலாம் வேண்டும். விளையாட்டின் மீதான கவனம் குறைய வேண்டுமானால் வேறு விதமான செயல்களைச் செய்ய அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

அமைத்தல், வாகனங்களை பராமரித்தல், அறையை சுத்தம் செய்தல், புத்தகங்கள், துணிகள் ஆகியவற்றை ஒழுங்காக அடுக்கி வைத்தல் முதலியனவற்றை செய்யச் சொல்லலாம்.

நடனம், ஓவியம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி முதலிய ஏதேனும் ஒன்றில் ஆர்வம் இருந்தால் அது சம்பந்தமான போட்டிகளில் பங்கேற்க ஊக்கப்படுத்தலாம்.

ஒருவேளை குறைவான மதிப்பெண்களை அவர்கள் பெற நேர்ந்தால் நீ நன்றாக விளையாடுகிறாய், அதே விதமான கவனத்தைப் படிப்பில் செலுத்தினால் கண்டிப்பாக உன்னால் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும்" என்றுதான் சொல்லிப் பாருங்களேன். இந்த வார்த்தைகளே ஒரு மாயாஜாலம் செய்யும்.

இறுதியாக விளையாடுவதால் உடல் உறுதி ஏற்படும். குழு மனப்பான்மை, சமூக சார்புநிலை, வெற்றி தோல்விக்குப் பழக்கப்படுதல், தலைமைப்பண்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு போன்றவை மேம்படும். எனவே ஒரு நாளைக்கு கண்டிப்பாக 2 மணி நேரமாவது விளையாட அனுமதியுங்கள்.

More for you

கோடையைக் கொண்டாடலாமே!

விடுமுறை தொடங்கிவிட்டாலே குழந்தைகளை எந்த வகுப்பில் சேப்ர்பது என்ற கேள்வி பெற்றோர் எல்லோர் மனதிலும் தோன்றும். அதற்...


காயத்ரி சிவக்குமார்  • 1 min read

சாக்லேட் அப்படியே சாப்பிடலாமா?

விதவிதமான விளம்பரங்கள், கண்கவர் வண்ண பாக்கெட்களுடன் வழங்கப்படும் விளையாட்டுப் பொருட்கள், ஸ்டிக்கர்கள். இவை மட்டும்தான் ச...


காயத்ரி சிவக்குமார்  • 1 min read

உங்கள் குழந்தை விளையாட்டுக்கு அடிமையா?

மாலை முழுதும் விளையாட்டு - என்பது பாரதியின் வாக்கு, ஆனால் சில குழந்தைகளுக்கு நாளின் எல்லா நேரமும் மாலைநேரம்தா...


காயத்ரி சிவக்குமார்  • 2 min read

உங்கள் குழந்தை வாய் வழியாக சுவாசிக்கிறதா?

உங்கள் குழந்தைக்கு வாய் வழியாக சுவாசிக்கும் பழக்கம் இருக்கிறதா? எதனால் அப்பழக்கம் வந்தது என்று தெரியுமா?


Durai  • 7 min read