என்ன இருக்கு? எவ்வளவு இருக்கு? எதில் இருக்கு?

குழந்தைகள் நன்கு வளர சரிவிகித உணவுகள் தேவை. ஆனால், இன்றைய குழந்தைகளுக்கு துரித உணவுகள்தான் அதிகபட்ச விருப்பமாக இருக்கின்றன. விளைவு சிறு வயதிலேயே பல்வேறு உடல்நலக் குறைபாட்டுக்கு ஆளாகின்றனர்.

By ஜெயமேரி

குழந்தைகள் உயரத்துக்கும், வயதுக்கும் ஏற்ற எடையில் இருக்கின்றனரா என்று பாருங்கள். உடல் வளர்ச்சிக்கும் சக்திக்கும் தேவையான உணவுகளைப் பட்டியலிடுங்கள். அவற்றில் உள்ள சத்துகளையும் அவற்றில் உள்ள கலோரிகளையும் அறிந்து கொள்ளுங்கள். ஊட்டச்சத்துப் பற்றாக்குறைகள் குறித்தும் அதனால் ஏற்படும் அறிகுறிகள் குறித்தும் அதற்கான வழிமுறைகளையும் இக்கட்டுரை பட்டியலிட்டுத் தருகிறது.

ஊட்டச்சத்து அட்டவணை

தினம் தோறும் சாப்பிடுகிறோம். நமக்குப் பிடித்தவற்றையெல்லாம் சாப்பிடுகிறோம். ஆனால், அவை நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைத் தருகின்றனவா என்று யோசிப்பதில்லை. அதிலும் இன்றைய குழந்தைகளுக்கான உணவுப் பழக்கவழக்கங்கள் முற்றிலுமாக வேறு விதமாகவே இருக்கின்றன. புரதங்கள், கார்போஹைட்ரேட்கள்,கொழுப்பு மற்றும் எண்ணெய்ச் சத்துக்கள், உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின்கள்)தாதுஉப்புகள், நீர் இவை யாவுமே குழந்தைகள் உடலின் சீரான வளர்ச்சிக்கும், ஊட்டம் பெறவும் உதவுகின்றன.

உயிர்ச்சத்துக்கள்

வைட்டமின்களை ‘நுண் ஊட்டச்சத்து' என்று சொல்கிறோம். இவை மிகக் குறைந்த அளவில் தேவைப்பட்டாலும் குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கும், உடல் நலன் பாதுகாப்புக்கும் மிகப் பெரிய பங்களிப்பு இவற்றுக்கு உண்டு. இவை போதுமான அளவில் கிடைப்பதன் மூலமே உடலின் வளர்சிதை மாற்றம், இதயத் துடிப்பு, எலும்பு அடர்த்தி உள்ளிட்டவை இயல்பாக இருக்கும்.

என்ன இருக்கு? எவ்வளவு இருக்கு? எதில் இருக்கு?
என்ன இருக்கு? எவ்வளவு இருக்கு? எதில் இருக்கு?
என்ன இருக்கு? எவ்வளவு இருக்கு? எதில் இருக்கு?
என்ன இருக்கு? எவ்வளவு இருக்கு? எதில் இருக்கு?
என்ன இருக்கு? எவ்வளவு இருக்கு? எதில் இருக்கு?
என்ன இருக்கு? எவ்வளவு இருக்கு? எதில் இருக்கு?
என்ன இருக்கு? எவ்வளவு இருக்கு? எதில் இருக்கு?

More For You

More for you

We are unable to find the articles you are looking for.