‘நிபா வைரஸ்‘ அச்சம் வேண்டாம்!

சமீபத்தில் கேரள மாநிலத்தில் உருவாகியிருக்கும் நிபா நோய்த்தொற்று மக்களுக்குள் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்நோய் குறித்து நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இவை...

By பேரண்ட் சர்க்கிள் குழு  • 10 min read

‘நிபா வைரஸ்‘  அச்சம் வேண்டாம்!

சமீபத்தில் கேரள மாநிலத்தில் உருவாகியிருக்கும் நிபா நோய்த்தொற்று மக்களுக்குள் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நோய் குறித்து நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம் வாருங்கள்…

‘தன் தாத்தா பாட்டியுடன் கேரள மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் செல்லும் எண்ணத்தில் இருந்தார் மனு. அதற்கான ஏற்பாடுகளெல்லாம் செய்து கொண்டிருந்தபோது, கேரள அரசு நிபா நோய்தொற்று ஒருவருக்கு இருப்பதை உறுதிப்படுத்தியது. சென்ற ஆண்டு, இதே பிரச்சனையால் கேரளாவில் மட்டுமே 17 பேரின் வாழ்க்கை பரிபோனது. இது கேரளா முழுவதிலும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியது.

நிபா நோய்த்தொற்று- 2019

கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் வசிக்கும் 23 வயது மாணவி ஒருவருக்கு இந்தக் கொடிய நிபா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பூனாவின் நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் வைராலஜி (National institute of Virology)-க்கு அனுப்பப்பட்ட அந்த மாணவியின் சிரம்(serum samples) சாம்பிள்கள் நிபா வைரஸ் இருப்பதை உறுதி செய்தது. கேரள அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளும் இந்தச் செய்தியை உறுதி செய்தனர்.

இந்த நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் பொருட்டு அம்மாணவியை யாரெல்லாம் சந்திப்பதற்காக வருகின்றார்களோ அவர்கள் அனைவரையும் கவனிப்புக்கின் கீழ் கொண்டுவந்தது. சமீபத்திய தகவல்படி அவர்களில் 6 பேரில் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியதில் அவர்களுக்கு இந்த நோய்த்தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது. எனினும் “மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் இந்த நோய் வராமலும் பரவாமலும் தடுப்பதற்கான எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்று கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை மந்திரி கேகே ஷைலஜா“ உறுதி அளித்துள்ளார்.

எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள்

நிபா வைரஸ் பரவாமல் தடுக்க கர்நாடகாவின் 8 மாவட்டங்களிலும் தமிழ் நாட்டின் 7 மாவட்டங்களிலும் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கன்னட அரசு . சாமராஜா நகர், மைசூரூ, குடகு, வட கன்னட மாவட்டங்கள், தென் கன்னட மாவட்டங்கள், உடுப்பி, ஷிமோகா மற்றும் சிக்மகளூரு ஆகிய மாவட்டங்களில் அதிகாரிகளை எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ் நாடு அரசு கன்யாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், உதகமண்டலம், திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் தேனி ஆகிய 7 மாவட்டங்களில் அதிகாரிகளை எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த மாவட்ட அதிகாரிகள் நிபா நோயாளிகளுக்குத் தேவையான தனிப்பட்ட மெத்தைகள், வெண்டிலேட்டர்கள் (ventilators) மற்றும் இதர வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றுடன் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

கர்நாடகாவின் சுகாதார மையமும் அரசும் இந்த 8 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் யாருக்காவது நிபா அறிகுறி இருப்பது சந்தேகமாகத் தெரிந்தால்கூட உடனடியாக அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளது. மத்திய சுகாராத அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனிப்பட ஏற்பாடுகளை பரிசோதித்து சூழல் உரிய கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸ் குறித்து தலைப்புச் செய்திகள் வரத் தொடங்கியதும் பலருக்கும் நிபா வைரஸ் என்றால் என்ன? அது எப்படி பரவும்? இப்படி பல விஷயங்களை அறிந்து கொள்ள ஆர்வம் அதிகரித்து வருகிறது. எங்கள் ஆராய்ச்சிக் குழு சிறந்த நிபுணர்களுடன் இணைந்து நிபா குறித்த ஒருசில தகவல்கள் உங்களுக்காக…

நிபா வைரஸ் என்றால் என்ன?

• மலேஷியாவில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர் நிபா. இந்த வைரஸ் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது இந்த கிராமத்தில்தான். எனவே, அதுவே இதன் பெயராகிப் போனது.

• 1990 களில் மலேஷியாவில் உள்ள பன்றி விவசாயிகளிடையே மூளைக் காய்ச்சலாக வெளிவந்தது.

• உலக சுகாதார அமைப்பு ‘நிபா வைரஸ் வளர்ந்து வரும் ஒரு தொற்று நோய்‘ என்கிறது.

• இந்த நோய் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு தொற்றக்கொடியது.

• ஃப்ரூட் பேட்ஸ் (fruit bats) எனப்படும் ஒரு வகை வெளவால்கள்தான் இந்த நோயை முக்கியமாக பரப்பக்கூடியவை. பன்றிகளுக்கும் நோய் தொற்று ஏற்படலாம்.

• 90களின் பிற்பகுதியில் மலேஷியாவிலும் வங்காளத்திலும் பலரது உயிர் இதன் காரணமாக பலியானது.

• கடந்த காலங்களில் 40 முதல் 75 விழுக்காடு மக்கள் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கு எந்தவிதமான மருந்தும் கிடையாது. எனினும் குமட்டல், வாந்தி மற்றும் மன அழுத்தம் போன்ற அறிகுறிகளுக்கு ரிபவிரின் (Ribavirin) என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்து இருப்பது சற்றே ஆறுதலடையச் செய்கிறது.

மும்பையின் சென் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின்(Zen Multi Speciality Hospital) ஆலோசனை மருத்துவர், தீவிர மற்றும் தொற்று நோய் நிபுணர் விக்ராந் ஷா அவர்களோடு பேசுவோம் வாருங்கள்…

“நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவரை தனியாக வைத்து கவனித்தல்தான் மிக முக்கியமான ஒன்று. ஒருவருக்கு இந்நோயின் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அவரை தனிமைப்படுத்தி விரைவில் அவருக்கு மருத்துவ உதவி அளிக்க வேண்டும். இந்த நோய்த் தொற்றுக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை என்று எதுவும் கிடையாது. நோணைத் தடுப்பது மட்டுமே இதற்கான சிகிச்சை“ என்கிறார் இவர்.

நிபா நோய்த்தொற்றின் அறிகுறிகள்

• நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கூற்றுப்படி

• திடீரென அதிகப்படியான காய்ச்சல்

• தலைவலி

• தசை வலி

• குமட்டல் மற்றும் வாந்தி

• மனஅழுத்தம்

• குழப்பம்

• பின் கழுத்தின் தாங்க முடியாத வலி, வெளிச்சத்தை காண முடியாமல் போவது ஆகியவை சிலருக்குக் காணப்படுகின்றன.

• ஆரம்பகால அறிகுறிகளாக காய்ச்சல் மற்றும் சுவாச நோய் போன்றும் பின்னர் இதுவே மூளை அழற்சி(encephalitis) அல்லது மூளை பாதிப்புக்குள்ளாவதாகவும் (brain damage) மாறக்கூடும்.

• இந்த நோய்த்தொற்றால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் 5 நாட்களுக்குப் பின்னரோ அல்லது 2 வாரங்களிலோ நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தெரியும்.

• ஒரு சில நேரங்களில் இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டோர் நோய்த்தொற்று ஏற்பட்ட 48 மணிநேரங்களுக்குள்ளாகவே கோமாவுக்குச் சென்றுவிடுவர்.

• நோயின் வேகமும் மளமளவென்று அதிகரித்துக்கொண்டே போகும்.

இந்த நோய்த்தொற்று எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது?

“இஎல்ஐஎஸ்ஏ(ELISA) என்ற பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. இந்த பரிசோதனை தற்போது பூனாவிலுள்ள நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் வைராலஜி (National institute of Virology. Pune,) செய்யப்படுகிறது“ என்கிறார் ஷா.

‘நிபா வைரஸ்‘  அச்சம் வேண்டாம்!

யாரெல்லாம் ஆபத்தில் இருக்கின்றனர்?

இங்கு குறிப்பிட்டுள்ள நபர்களெல்லாம் நிபா நோய்த் தொற்றக்கூடிய ஆபத்தில் உள்ளவர்கள் என்கிறார் மருத்துவர் ஷா.

• பன்றிகளுடன் பணிபுரிபவர்கள், பன்றி இறைச்சி உண்பவர்கள்

• வௌவால்களுடன் நேரடியாக தொடர்பு உள்ளவர்கள்

• நோய்த்தொற்று உள்ள வௌவால்களால் கடிக்கப்பட்ட பழங்களை சாப்பிடுவோர்

• ஏற்கனவே நிபா நோய்த்தொற்று உள்ள நபர்களுடன் தொடர்பு உள்ளவர்கள்

• உங்களுக்கு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு இருக்கிறது என்றால் நிபா வைரஸ் உங்களைத் தாக்குவதற்கு சாத்தியமே இல்லை.

இதனால் குழந்தைகளுக்கு ஆபத்து உண்டா?

• நோயெதிர்ப்பு அமைப்பு இன்னமும் முழுமையாக உருவாகவில்லை எனும்போது, குழந்தைகள் இதுபோன்ற நோயாளிகள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லாமல் இருத்தல் நலம்.

• உங்கள் குழந்தைக்கு ஒருவேளை இந்நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தெரிகின்றன என்றால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

சிகிச்சை அளிப்பது எப்படி?

பாதிக்கப்பட்ட நோயாளியின் நிலை விரைவாக சீர்குலைந்து வருகிறது என்றால், அந்த நபருக்கு தீவிர பாதுகாப்பு கண்காணிப்பு அவசியம் தேவை. இருப்பினும், குமட்டல், வாந்தி மற்றும் நிபா வின் பிற அறிகுறிகள் தெரியும் பட்சத்தில் உடனடியாக (Ribavirin) ரிப்விரின் என்றும் ட்ரிபவிரின் (tribavirin) என்றும் அறியப்படும் நோய் எதிர்ப்பு மருந்தைக் கொண்டு சிகிச்சை அளிக்கலாம். இது, சுவாசப் பிரச்சனை மற்றும் நோய்த்தொற்றுக்கு அளிக்கப்படும் மருந்து என யுனைடட் ஸ்டேட்ஸ் ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்டிரேஷன் (United States Food and Drug Administration(FDA))னால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நோய் பரவுவதைத் தடுப்பது எப்படி?

• பன்றிகளையும், பன்றிகளோடு தொடர்பு கொள்வதையும் தவிர்த்தல் அவசியம்.

• கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் மற்றும் தங்களைத் தாங்கள் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

• வெளியில் சென்று சுகாதாரமில்லாத இடத்தில் பழச்சாறு அருந்துவதைத் தவிக்க வேண்டும்.

• பழங்கள் காய்கறிகளை பயன்படுத்துவதற்கு முன் நன்றாகக் கழுவ வேண்டும்.

• சுகாதாரமான முறையில் தயார் செய்யப்பட்ட உணவுகளையே உண்ண வேண்டும். குறிப்பாக வீட்டில் சமைத்த உணவுகளையே உண்ண வேண்டும்.

• இன்னமும் சொல்ல வேண்டுமென்றால் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களில் பணியில் ஈடுபடும்போதும் முகத்தை நன்றாக மூடிக் கொண்டு செல்லவும். 

இப்போதுவரை நிபா நோய்த்தொற்றுக்கு எந்தவிதமான மருத்துவமும் இல்லை என்றாலும் அச்சப்பட அவசியமில்லை. இங்கே குறிப்பிட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் பின்பற்றினால் நிபா உங்களை நெருங்கவே நெருங்காது.

(தமிழில்: சுகுணா ஸ்ரீனிவாசன்).

ஆங்கிலத்தில் படிக்க: 

Nipah Virus