வேம்பு எனும் நண்பன்

பெற்றோரின் உண்மையான மகிழ்ச்சியே அவர்தம் குழந்தைகளின் ஆரோக்கியமும், சந்தோஷமும்தான். அப்படிப்பட்ட உடல் நலனைப் பாதுகாக்கும் அந்த வரம்தான் வேம்பு . வாங்க, வேம்பு சொல்வதைக் கேட்போம்!

By ராஜசேகரன்

வேம்பு எனும் நண்பன்

இதோ கோடை காலம் வந்துவிட்டது. கோடைக்கால நோய் பலவற்றிலிருந்து நம்மையும் நம் குழந்தைகளையும் காக்க வல்லது வேம்புதான்.வேம்பு பல்லுக்கு மட்டும் நல்லதன்று, இதன் விதை, இலை, பழம், பூ, எண்ணெய், வேர் மற்றும் பட்டை என, வேம்பு மொத்தமும் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரக்கூடியதும்கூட.

‘சர்வரோக நிவாரணி என்பதற்கிணங்க வேம்பு எல்லா நோய்களுக்கும் தீர்வு தருகின்ற ஒரே மூலிகைத் தாவரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே நம் குழந்தைகளுக்கு வேம்பின் பெருமையை எடுத்துக் கூற வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும் .

வேம்பு என்னவெல்லாம் செய்யும்?

வேப்பிலை மகத்துவம் வாய்ந்த மருத்துவ பொருளாகும்.

வேப்பிலையை அரைத்து, சாறு எடுத்து, பூச்சி கடித்த இடத்தில் தடவினால் விஷத்தின் தன்மை முறிந்துவிடும். அதுமட்டுமல்ல, வேப்பிலையில் அசாடிராக்சிடின் உள்ளதால் அது உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைத்து புற்றுநோயைத் தடுக்கிறது.

ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் நீர் ஊற்றி 7 வேப்பிலைகளை போட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதை காலை, மாலை என இருவேளைகளும் குடித்து வந்தால் மலேரியா நோய் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

இதயத்துக்கு இதமானது

வேப்பிலை ரத்தத்தின் அடர்த்தியை குறைத்து, உடலில் சுத்தமான ரத்த ஓட்டம் மென்மையாக செயல்பட உதவுகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்த ஓட்டம் சீராகி ‘கரோனரி என்ற இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.

வேப்பிலையில் உள்ள பயோகெமிக்கல் பொருட்கள் குடற்புழு பிரச்சனைகளை சரி செய்கின்றன. சளித் தொல்லை உள்ளவர்கள் வேப்பிலையைக் கொதிக்க வைத்து ஆறிய பின் குடிப்பது நல்ல பயனளிக்கும்.

வீட்டு வைத்தியம்

பண்டைக் காலம் முதலே நம்மைப் பாதுகாத்து வருகின்ற மூலிகைத் தாவரம் என்றால் அது வேம்புதான்.

இந்த வேம்பு வீட்டு மருத்துவத்தில், மூத்த தலைமுறையினர் பரிந்துரைக்கும் பாரம்பரியமிக்க மருந்துப்பொருட்களின் மிக முக்கியமான ஒன்று.

அன்று முதல் இன்று வரை

ஆயுர்வேத மருத்துவத்தில் தொடங்கி இன்றைய நவீன மருத்துவ முறையிலும் வேம்பின் பங்கு மிக முக்கியமானது. எத்தனையோ மருந்துப் பொருட்களில் வேம்பின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. நாம் பயன்படுத்தும் டூத்பேஸ்ட், சோப்பு, பவுடர் போன்ற எல்லா பொருளிலும் வேம்பு நிறைந்துள்ளது.

வேம்பு எனும் நண்பன்

உணவே மருந்து

வேப்பிலை நிம்பின், நிம்பினென் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியாக்களை கொண்டுள்ளதால் அதன் சுவை கசப்பாகத்தான் இருக்கும். இனிப்பாக இருக்கின்ற பொருட்கள் சுவையாக வேண்டுமானால் இருக்கலாம், ஆனால், அவை ஆரோக்கியத்தை அளிக்காது. கசப்பாக இருந்தாலும் உடலுக்குப் பல்வேறு நன்மைகளை வாரி வழங்குவது வேம்பு போன்ற கசப்பான உணவுப் பொருட்கள்தான். சுவையை விட நலன் மிக முக்கியம் என்பதால் நாமும் நம் செல்ல குழந்தைகளுக்கு வேம்பின் அருமைகளை எடுத்துக் கூறவேண்டும்.

வேம்பின் பொருள்களை அன்றாட வாழ்க்கையில் நாமும் பயன்படுத்தி நமது குழந்தைகளையும் பயன்படுத்த பழக்கவேண்டும். வேம்பின் சுவை கசப்பாக இருக்கலாம். ஆனால், அதன் நன்மைகள் இனிப்பானவை என்பதைப் பிள்ளைகளுக்குப் புரிய வைப்போம்.