உங்கள் குழந்தை வாய் வழியாக சுவாசிக்கிறதா?

உங்கள் குழந்தைக்கு வாய் வழியாக சுவாசிக்கும் பழக்கம் இருக்கிறதா? எதனால் அப்பழக்கம் வந்தது என்று தெரியுமா?

By Durai

தனது ஒன்பது மாத குழந்தை அயர்ந்து தூங்குவதைப்பார்த்து கொண்டிருந்தார் மீரா. கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் குழந்தை வாய் திறந்து மூச்சு விட்டு கொண்டு இருப்பது தெரிந்தது. உடனே சுதாரித்துக் கொண்டார். குழந்தையின் வாயை மூட முயற்சிக்கிறார். ஆனால் பயனில்லை.

 எப்போதெல்லாம் வாயை மூடி விடுகிறாரோ, அப்போதெல்லாம் குழந்தையின் வாய் திறந்து கொண்டு விடுகிறது. மீராவின் புன்னகை மாறி, முகத்தில் கவலை தொர்றிக்கொள்கிறது. வாய் வழியாக மூச்சு விடுவது குழந்தையின் முக அமைப்பை மாற்றி விடும் என்று கவலைகொள்கிறார். மீராவுக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும் இதே கவலை இருக்கிறது.

உங்கள் குழந்தை வாய் வழியாக சுவாசிக்கிறதா?

வாய் வழியாக மூச்சு விடுவது எதனால்?

சுவாசத்துக்கான வழியில் காற்று செல்வது தடைடும்போது ஆக்சிஜன் செல்ல எளிய வழி இல்லாமல் போய்விடுகிறது. அதனால் தான் உங்களது குழந்தை வாய் வழியாக சுவாசிக்கிறது. என்னென்ன காரணங்களால் மூக்கடைப்பு ஏற்படுகிறது? இதோ சில வாய்ப்புகள்…

சளி பிடிப்பது, ஒவ்வாமை, சைனஸ் தொற்று

மூக்கு மற்றும் தாடையின் வடிவமைப்பு

நாசியின் உள்ளே ஏற்படும் திடீர் திசு வளர்ச்சி

டான்சில் வளர்ச்சி ( டான்சில் என்பது தொண்டையின் பின் புறம் உள்ள மெல்லிய இரட்டை சிசு ஜோடி ஆகும்)

அடினாய்டு ( Enlarged adenoids). வளர்ச்சி (அதாவது மூக்கின் பின்புறத்துக்கும் தொண்டைக்கும் இடையில் உள்ள திசு, அசாதாராமான வகையில் வளர்ந்தால் அதனை அடினாய்டு என்கிறோம்).

இடது, வலது நாசிகளைப் பிரிக்கும் மெல்லிய சுவரில் ஏற்படும் ( Deviated nasal septum) மாற்றம்.

தடையற்ற உறக்கமின்மை ( Sleep apnea) கோளாறு

வாய்வழியாக சுவாசித்தால் என்னவாகும்?

உங்கள் குழந்தை, சளித் தொந்தரவு காரணமாகவோ அல்லது உடற்பயிற்சி செய்து முடித்துவிட்டு வந்த பிறகோ வாய் வழியாக சுவாசித்தால் நீங்கள் கவலைப்பட ஏதுமில்லை. ஆனால் வழக்கமாகவே உங்கள் குழந்தை வாய் வழியாக மூச்சு விடுகிறது என்றால் கீழ்க்காணும் பிரச்சனைகள் வரக்கூடும்:

* பற்கள் ஒழுங்கற்ற முறையில் அமைவது

* சீரற்ற முக அமைப்பு ஏற்படுவது

*பற்கள் தேய்வது, பல் சொத்தை ஏற்படுவது

*உறக்கமின்மை தொடர்பான தொந்தரவுகள் (chronic fatigue)

*உச்சரிப்பில் ஏற்படும் தடங்கல் ( lisp)

*ஆஸ்துமா பிரச்சனை இருந்தால் அது தீவிரமடைவது.

உறங்கும் போது குழந்தை வாய் திறந்திருந்தால் என்று வாய்வழி சுவாசமா?

ஒரு கம்பத்தில் வாய் திறந்திருந்தால் அதனை நாம் வாய் வழி சுவாசம் என்று சொல்லிவிடுகிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. நெதர்லாந்து நாட்டில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. உறங்கும் போது வாயைத் திறந்து வைத்துக் கொண்டு உறங்கும் குழந்தைகளில் 50 விழுக்காடு பேர் மட்டுமே வாய் வழியாக சுவாசிக்கின்றனர் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. குழந்தைகள் வாயைத் திறந்து வைத்திருந்தால் கூட மூக்கின் வழியாகவே சுவாசிக்கின்றனராம். இவர்கள் தங்கள் நாக்கின் பின்பகுதியை அடைத்துக்கொண்டு உறங்குவதால் இருந்திருந்தாலும் வாய்வழியாக சுவாசித்தல் நடைபெறுவதில்லை.

எப்படிக் கண்டறிவது?

உறங்கும்போது வாயைத் திறந்து வைத்திருத்தல் என்பது வெளிப்படையாகத் தெரிகிற ஒரு அறிகுறியாக இருந்தாலும் வேறு சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். அவையாவன:

நாள் முழுவதும் தூங்கி வழிவது

கவனக் குவிப்பில் ஏற்படும் சிரமம்

கண்களுக்கு கீழே கரு கருவளையம் ஏற்படுவது

குறட்டை விடுவது

சுவாசிப்பதில் பிரச்சனை

அதிகப்படியாக எரிச்சல் அடைதல்

அடிக்கடி அழுவது, இரவில் அடிக்கடி எழுந்து கொள்வது

பற்கள் கும்பலாக முளைப்பது

உதடு, வாய் ஆகியவை வறண்டுவிடுவது

மூக்குவழி சுவாசத்தின் பயன்கள்

*மூச்சு விடும் பொழுது தேவையற்ற தூசித் துகள்கள் இருந்தால் அவை நுரையீரலுக்கு நேரடியாகச் சென்று விடாமல் மூக்கு வடிகட்டி விடுகிறது.

* மூக்கு வழியாக சுவாசிக்கும் பொழுது செல்களும் நுரையீரலும் அதிக அளவு ஆக்சிஜனைப் பெறுகின்றன. இதனால் தசைகள்போதுமான அளவு தளர்வடைகின்றன.

*உள்ளிழுக்கும் காற்று தேவையான அளவுக்கு ஈரப்பதத்தையும் வெப்பத்தையும் மூக்குக்கு தந்துவிடுகிறது. இதன் மூலம் உடல் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுவதோடு நுரையீரலுக்குள் காற்று செல்லும் வழியும் சுமூகமாக்கப்பட்டுவிடுகிறது.

வாய்வழி வாசித்தலை சரிசெய்ய முடியுமா?

ஆம் என்பது இதற்கான விடை ஆகும். உங்கள் குழந்தை எதனால் வாய் வழியாக மூச்சு விடுகிறது என்பதைப் பொறுத்து இதற்கான சிகிச்சை அளிக்கப்படும். எடுத்துக்காடாக, டான்சில் வீக்கத்தால் வாய் வழியாக உங்கள் குழந்தை சுவாசித்தால் காது-மூக்கு-தொண்டை நிபுணரின் உதவியுடன் சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். முக அமைப்பு குறுகலாக உள்ள குழந்தையாக இருப்பின் பல் மருத்துவரின் உதவியுடன் சைனஸ் மற்றும் நாசிப்பகுதியை சற்றே விரிவுபடுத்த முடியும்.

ஒவ்வாமைதான் மூக்கடைப்புக்குக் காரணம் என்றால் ஸ்பிரே (nasal sprays or antihistamines) கைகொடுக்கும். அதேபோல தெரபிஸ்டுகளின் உதவியுடன் முறையாக மூச்சுவிடும் லாவகத்தைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம். உறங்கும்போதுதான் குழந்தை வாய் வழியாக சுவாசிக்கிறது என்றால் தலையணையின் உயரத்தை அதிகரித்து அப்பிரச்சனையை சரி செய்யலாம். சுருக்கமாகச் சொன்னால், வாய் வழியாக மூச்சு விடுவது என்பது குணப்படுத்தக்கூடிய பிரச்சனைதான். எவ்வளவு விரைவாக அதனைக் கண்டறிகிறோமோ, அந்த அளவுக்கு சிகிச்சை எளிதாகும்.

வாய் வழி சுவாசமும் கைசூப்பும் பழக்கமும்

தொடர்ச்சியாக கைசூப்பும் பழக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு வாய் வழி சுவாசப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. கைசூப்பும்போது என்ன நடக்கிறது? மேற்பல் முன்னோக்கி எந்துகிறது. கீழ்வரிசைப்பல், பின்னோக்கித் தள்ளப்படுகிறது. மேலும் நாக்கும் பல்லுக்கு எதிராக உந்துகிறது. அதன் விளைவாக வாய் வழி சுவாசம் தொடங்குகிறது.

உங்கள் குழந்தை வாய் வழியாக சுவாசிக்கிறதா?

அப்படியானால் கைசூப்பும் பழக்கம் குறித்துக் கவலை கொள்ள வேண்டுமா? தேவையில்லை. இது மிகவும் இயற்கையான ஒன்றே. எல்லாக் குழந்தைகளும் 12 வாரங்களில் கை சூப்பத் தொடங்குவர். அதாவது கருப்பையில் இருக்கும்போதே. தங்களைத்தாங்களே ஆசுவாசப்படுத்திக்கொள்ள சிசு கண்டுபிடித்த வழி அது.

 வல்லுநர்கள் சொல்வதெல்லாம், 3 வயதைக்கடந்தும் கை சூப்புதல் தொடரக்கூடாது என்பதே. 5 வயதில்தான் இதற்கான சிகிச்சையைத் தொடங்கவேண்டும் என்று அமெரிக்க குழந்தைகள் மருத்துவ அகாடமி தெரிவிக்கிறது. கைசூப்புதல் மட்டும் இருந்தால் கவலைப்படத்தேவையில்லை. மாறாக, வாய் வழி சுவாசம் இருந்தால்மட்டும் வல்லுநரின் உதவியுடன் பிரச்சனையை அணுகவேண்டும்.

More For You

More for you

We are unable to find the articles you are looking for.