உங்கள் ‘திரை நேரத்தை’ நிர்வகிக்க 21 டிப்ஸ்

தினமும் நீங்களும் பிள்ளைகளூம் செல்பேசி, இதர மின்னணு சாதனங்களில் செலவழிக்கும் நேரம் எவ்வளவு? ஏதாவது கணக்கு உண்டா? யோசியுங்கள்.

By பேரண்ட் சர்க்கிள் குழு

உங்கள் ‘திரை நேரத்தை’ நிர்வகிக்க 21 டிப்ஸ்

செல்ஃபோன்களால் நாம் நன்கு பிணைக்கப்பட்டிருக்கிறோம். அதனால்தான் மற்றவர்களுடன் நேரில் பேசிப்பழகும் பிணைப்பை இழக்கிறோம். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகுக்கான பிரச்சனை. 

குடும்பம், குழந்தைகளுடனான நேரத்தையும் செல்ஃபோன் திரையில் நாம் செலவிடும் நேரத்தையும் சமன் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அதை எப்படி செய்வது? உலகப்புகழ்பெற்ற 6 வல்லுநர்கள் #Gadgetfreehour பிரச்சாரத்தை முன்னிட்டு வழங்கும் பிரத்யேக டிப்ஸ் இவை.

• டாக்டர்.லாரா மார்கம் ( ‘Peaceful Parents, Happy Kids’ series நூல்களின் ஆசிரியர்)

• நிர் இயல் (Nir Eyal : ‘Indistractable: How to Control Your Attention and Choose Your Life நூலின் ஆசிரியர்)

• டாக்டர் விக்டோரியா டன்க்ளி ( ‘Reset Your Child’s Brain’நூலின் ஆசிரியர்)

• பிளேக் ஸ்னோ (How to Stay Connected after Disconnecting நூலின் ஆசிரியர்)

• ஒரியனா ஃபீல்டிங் ( Unplugged: How to Live Mindfully in a Digital World நூலின் ஆசிரியர்)

• தன்யா கூடின் ( Your Digital Detox for a Better Life and Stop Staring at Screens! நூலின் ஆசிரியர்)

இதோ, 21 டிப்ஸ் உங்களுக்காக…

1. அதிகாலை துயில் எழுந்தவுடன் ‘செல்போன் எங்கே?’ என்று படுக்கையைத் துழாவாதீர்கள். அதற்கு மாற்றாக, அன்றைய நாள் என்னென்ன நல்ல விஷயங்களைச் செய்யலாம் என்ற சிந்தனையோடு அந்நாள் தொடங்கட்டும்.

2. அலாரம் வைத்து எழுந்திருக்க வேண்டுமா? செல்ஃபோன் அலாரம் வேண்டாம். கடிகாரத்தைப் பயன்படுத்துங்கள்.

3. குளியலறைக்குள் ஃபோன் போகவே வேண்டாம்.

4. மதிய உணவு இடைவேளையின்போது உங்கள் செல்ஃபோனை மேஜையின் டிராயரில் ஒரு மணி நேரம் வைத்துவிடுங்கள்.

5. அலுவலகம்/பள்ளிக்குச் செல்லும்போதும், சென்று திரும்பும்போதும் செல்ஃபோனை அணைத்துவையுங்கள்.

6. சார்ஜ் செய்வதாக இருந்தாலும் படுக்கையறைக்கு வெளியே அதைச் செய்யுங்கள்.

7. ஒவ்வொரு இரவும் குறிப்பிட்ட நேரம் வைஃபை-வசதியை நிறுத்திவையுங்கள்.

8. நோட்டிஃபிகேஷன்களை (முக்கியமானவை தவிர்த்து) அணைத்துவையுங்கள்.

9. குறிப்பிட்ட நேரத்தில் சமூக ஊடகங்களைத் தடுத்து நிறுத்தும் செயலியை (ஆப்) உங்கள் செல்ஃபோனில் பதிவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

10. குடும்பம் முழுமைக்குமான ஊடகத்திட்டம் ஒன்றை எல்லோரும் சேர்ந்து உருவாக்குங்கள்.

11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ‘கேட்ஜெட் இல்லாத நேரம்’ ஒன்றை உருவாக்கி, தினமும் அதனைப் பின்பற்றுங்கள்.

12. வீட்டுக்குள்ளும் கேட்ஜெட் அனுமதியற்ற இடங்கள் என்று சிலவற்றை ஒதுக்குங்கள்.

13. செல்ஃபோன்களுக்கு ஒரு ஓய்வறை இருக்கட்டும். கேட்ஜெட் வேண்டாம் என்று முடிவெடுக்கும் நேரத்தில் அந்த சிறு பெட்டியில் அவை ஓய்வெடுக்கட்டும்.

14. வீட்டுக்குள் நுழையும்முன்பே செல்ஃபோன் வேலைகளை முடித்துவிடுங்கள். வீட்டுக்குள் நுழைந்தபிறகு அதற்கு வேலை இருக்கக்கூடாது, குழந்தைகள் உறங்கும்வரை இது நீடிக்கட்டும்!

15. உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் ஆகியோருடன் நேரத்தை இன்பமாக செலவிடும்போது ஃபோனில் உள்ள அனைத்து நோட்டிஃபிகேஷன்களையும் அணைத்துவிடலாம், அல்லது மறைத்துவிடலாம்.

16. மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது கையில் ஃபோனை வைத்திருந்தால் அது நிச்சயம் கவனச்சிதறலை ஏற்படுத்தும். எனவே, மற்றவர்களுடன் நேருக்குநேர் உரையாடும்போது செல்ஃபோன் தள்ளிப்போய்விடட்டும்.

17. வீட்டிலோ, வெளியிலோ எங்கு சாப்பிட்டாலும், உணவு மேஜையில் செல்ஃபோனுக்கு அனுமதி தேவையில்லை.

18. எங்காவது குடும்பமாக வெளியே செல்கிறீர்களா? செல்ஃபோன் வீட்டிலேயே இருக்கட்டும்.

19. வாரத்தில் ஒரு நாள் ‘கேட்ஜெட் திரை’ விடுமுறை விடலாமே!

20. ’கேட்ஜெட் இல்லா வேர இறுதிநாட்களைத்’ திட்டமிடுங்களேன்!

21. கேட்ஜெட்கள் இல்லாத சுற்றுலாவை யோசித்தாலேன்ன!

மேலும் ஆலோசனைகளுக்கு (link to article on tips)

மேலே கண்ட ஆலோசனைகளைப் பின்பற்றி, கேட்ஜெட் பிணைப்பை தற்காலிகமாக விடுத்து, உறவுப்பிணைப்பை வலுப்படுத்துங்கள். Disconnect2Reconnect என்ற விஷயத்தை முயலுங்கள். 

கேட்ஜெட் இல்லா நேரம் குறித்த உறுதிமொழியை இந்த இணையதளத்தில் மேற்கொள்ளுங்கள்: www.gadgetfreehour.com . குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் கூடிக்களியுங்கள்!

Join our Circles to share, discuss and learn from fellow parents and experts!

Looking for expert tips and interesting articles on parenting? Subscribe now to our magazine. Connect with us on Facebook | Twitter | Instagram | YouTube