உங்கள் வீட்டுப் பெண்களை உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

International Women's Day

By கா.சு.துரையரசு, அருந்ததி ஸ்வாமி.  • 7 min read

உங்கள் வீட்டுப் பெண்களை உங்களுக்கு எவ்வளவு தெரியும்?


சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படும் இந்நாளில் பெண்ணினத்தின் பெருமைபற்றி நாம் சளைக்காமல் பேசுகிறோம். ஆனால் நம் வீட்டில் இருக்கும் பெண்களைப்பற்றி நாம் எவ்வளவு தெரிந்துவைத்திருக்கிறோம்?

பெண்கள் இன்றி இவ்வுலகே இல்லை என்பதற்கு ஆதாரங்கள் வேண்டியதில்லை. வீட்டில், அலுவலகத்தில், சமூகத்தில் என்று உலகம் பெண்களால் ஆனது. வெளி உலகில் உள்ள பெண்களை மதிக்கக்கூடிய நாம், அங்கீகரிக்கக்கூடிய நாம், எந்த அளவுக்கு நமது வீட்டில் உள்ள பெண்களைப் புரிந்துவைத்திருக்கிறோம்? அதற்கான சுய பரிசோதனைதான் கீழ்க்காணும் இந்தத்தேர்வு. இது முழுக்க முழுக்க ஆண்களுக்கானது.

இக்கேள்விகளுக்கான விடைகள் என்று எங்களிடம் ஏதுமில்லை. இவற்றுக்கான விடைகள் உங்களுக்கு மட்டுமே தெரியும். உங்களுக்கும் தெரியவில்லை என்றால் உங்கள் குடும்பத்தாரோடு உட்கார்ந்து பேசி அவற்றுக்கான விடைகளைக் கண்டறியுங்கள்.

பெண்களை, அவர்களது பங்களிப்பை, உங்களுடைய பொறுப்பை மென்மேலும் புரிந்துகொள்ள இது உங்களுக்கு உதவும்.


தாயார்

 • உங்கள் தாயாருக்குப் பிடிக்காத உணவு எது?
 • உங்கள் தாயாரின் பிறந்த ஆண்டு எது?
 • உங்கள் அம்மாவை உங்கள் அப்பா என்ன சொல்லி அழைப்பார்?
 • உங்கள் அம்மாவிடம் கடைசியாக பேசியது எப்போது?
 • எதைப் பற்றிப் பேசினீர்கள்?
 • உங்கள் தாயார் உட்கொள்ளும் மருந்தின் பெயர் என்ன?
 • உங்கள் தாயார் கடைசியாக உங்களிடம் வாங்கித்தரக்கேட்ட பொருள்?
 • அவரது திருமண நாள் எது?
 • உங்கள் அம்மாவுக்குப் பிடித்த நிறம் எது?

மனைவி

 • உங்கள் மனைவியின் பிறந்த ஆண்டு எது?
 • உங்கள் மனைவியின் செல்லப் பெயர் (அவர்கள் வீட்டில்) என்ன?
 • உங்கள் மனைவியின் உடன் பிறந்தவர்கள் பெயர்களை உங்களால்
 • யோசிக்காமல் சொல்ல முடியுமா?
 • உங்கள் பிறந்த நாளுக்கு முதன் முதலாக உங்கள் மனைவி அளித்த
 • பரிசுப்பொருள் நினைவிருக்கிறதா?
 • மனைவிக்கு கடைசியாக வாங்கிக் கொடுத்த உடை எது? அதன் நிறம்?
 • மனைவி முதன் முதலாக பணி செய்தது எந்த நிறுவனத்தில்?
 • அவருக்குப் பிடித்த சினிமா நட்சத்திரங்கள் மூன்று பெயரைக் கூறுங்கள்.
 • உங்கள் மனைவி காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறார்?
 • உங்கள் மனைவியின் தோழிகள், நண்பர்கள் பெயர்களைச் சொல்ல முடியுமா?
 • உங்கள் மனைவியைக் கண்கலங்க வைத்த திரைப்படம் எது?
 • உங்கள் மனைவியை மகிழ்ச்சியடையச் செய்யும் விஷயம் எது?
 • நீங்கள் உங்கள் மனைவியை அனுமதிக்காத விஷயம் எது?
 • உங்கள் மனைவி உடல்நலமின்றி இருக்கிறார் என்பதை எப்படிக் கண்டறிவீர்?
 • உங்கள் மனைவி முதன்முதலாக உங்களுக்கு வாங்கித்தந்த பரிசுப்பொருள் எது?

மகள்

 • உங்கள் மகளுக்குப் பிடித்த நிறம் எது? பிடிக்காத நிறம் எது?
 • உங்கள் மகளுக்குப் பிடித்த உடை எது?
 • உங்கள் மகளுக்காக வாங்கிய முதல் பொம்மை எது?
 • உங்கள் மகள் எந்தப் பிரிவில் (செக்ஷன்) படிக்கிறார்?
 • கடந்த முறை உங்கள் மகள் வாங்கிய கிரேடு என்ன?
 • உங்கள் மகளின் வகுப்பில் என்னென்ன பாடங்கள் இருக்கின்றன?
 • உங்கள் மகள் ஏதாவது ரகசியத்தை (எவரிடமும் சொல்லாத) சொல்லியிருக்கிறாரா?
 • ஏதாவது ரகசியத்தை உங்கள் மகளிடம் நீங்கள் சொல்லியிருக்கிறீர்களா?
 • உங்களைப்பற்றிய உங்கள் மகளின் கருத்து ( ஒரு மனிதனாக) என்ன?
 • உங்கள் மகள் உங்கள் சகோதரியிடம் கடைசியாகப் பேசியது எப்போது?

பாட்டி

 • உங்கள் பாட்டியிடமிருந்து கற்றுக்கொண்ட நல்லொழுக்கம் எது?
 • உங்கள் பாட்டியை நீங்கள் கடைசியாக எங்கே வெளியில் அழைத்துச்சென்றீர்கள்?
 • கடைசியாக உங்கள் பாட்டியிடம் நீண்ட நேரம் பேசியது எப்போது?

மாமியார்

 • உங்கள் மாமியார் கடைசியாக உங்கள் வீட்டுக்கு எப்போது வந்தார்?
 • குழந்தை வளர்ப்பு குறித்து உங்கள் மாமியார் உங்களுக்கு எப்போது அறிவுரை சொன்னார்?
 • உங்கள் மாமியாருக்கு பிடித்த பேசுபொருள் எது?
 • நீங்கள் வீட்டுக்கு தாமதமாக வரும்போது அவர் என்ன சொல்வார்?

பேத்தி

 • உங்கள் பேத்திக்குப் பிடித்த விளையாட்டு எது?
 • உங்கள் பேத்தியிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?
 • உங்கள் பேத்தி யார் முக ஜாடை?
 • உங்கள் பேத்திக்குப் பிடித்த கதை (நீங்கள் சொல்லும் கதைகளில்) எது?

சகோதரி

 • உங்கள் சகோதரியின் பிறந்த நாள் எது?
 • உங்கள் சகோதரிக்குப் பிடிக்காத நிறம் என்ன தெரியுமா?
 • உங்கள் சகோதரி உங்களை சிறுவயதில் செல்லமாக என்னவென்று சொல்லி அழைப்பார்?

மருமகள்

 • உங்கள் மருமகளின் கல்வித்தகுதி என்ன?
 • உங்கள் மருமகளிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன?
 • உங்கள் மருமகளுக்கு வேறு பெயர் சூட்டுவதாக இருந்தால் என்ன
 • பெயரைச் சூட்டுவீர்கள்?
உங்கள் வீட்டிலுள்ள பெண்களை நீங்கள் நன்கு அறிந்திருப்பதன்மூலம் நீங்கள் நல்ல புரிதலுக்கு வருகிறீர்கள். அவர்களை அங்கீகரிக்கிறீர்கள். அவர்களை நீங்கள் மதிக்கிறீர்கள், மரியாதை செலுத்துகிறீர்கள் என்பதற்கான குறியீடு அது. அதேபோல அவர்களுக்கும் உங்களுக்கும் இடையிலான தேவையற்ற மனக்கசப்புகள் விலகும். அவர்களை முன்முடிவுகளுடன் அணுகுவதை நீங்கள் நிச்சயம் குறைத்துக் கொண்டுவிடுவீர்கள். யாருக்கெல்லாம் ஆதரவு, தகவல்கள், நட்புரீதியிலான உரையாடல், ஆலோசனை முதலியவை தேவைப்படுகின்றன என்பதையும் இதன்மூலம் நன்கு புரிந்துகொள்ள முடியும்."
-அருந்ததி ஸ்வாமி, மனநல ஆலோசகர்.

குழந்தை வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகள், கட்டுரைகளைப் படிக்க விரும்பினால் இங்கே க்ளிக் செய்யவும். Connect with us on Facebook | Twitter | Instagram | YouTube