நேரம் தவறாமையைக் கற்றுக்கொடுப்போம்!

நேரம் தவறாமை, நம் பிள்ளைகளுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்பு. அதனை அவர்களுக்குக் கற்றுத்தருவதற்கு என்று சில வழிகள் உண்டு.

By கல்யாணி கிருஷ்ணன்  • 9 min read

நேரம் தவறாமையைக் கற்றுக்கொடுப்போம்!

‘வெற்றிக்குப் பின்னால்’ என்ற தலைப்பின் வரிசையில் இந்த மாதம் நாம் பார்க்கப் போவது நேரம் தவறாமை குறித்து.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பிந்தியா ஸ்ரீகுமார் (கற்பனைப்பெயர்) அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான தகுதித் (நுழைவுத்) தேர்வு எழுதும் அறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதனால் அவர் விரும்பிய படிப்பில் சேரமுடியாமல் போய்விட்டது. இது அவரது துரதிர்ஷ்டமா? அல்லது திட்டமிடாமையின் விளைவா?

"எவ்வளவுதான் சீக்கிரம் கிளம்பினாலும் எப்படியும் பத்து நிமிடம் தாமதமாகிவிடுகிறது. இந்த சென்னை டிராஃபிக் ரொம்ப மோசம். ரயில்கூட சரியில்லை இத நம்பி எப்படிப்பா அலுவலகத்துக்கு நேரத்துக்கு வர்றது? இது நம்ம அதிகாரிங்க யாருக்காவது தெரியுதா?" இப்படிப் புலம்புவோர் பலர். 

இதற்கெல்லாம் என்ன காரணம்? துரதிர்ஷ்டமா அல்லது டிராஃபிக்கும், ரயிலுமா? இல்லவே இல்லை. காலம் தவறாமை என்ற பழக்கத்தைக் கடைபிடிக்காததுதான் இப்பிரச்சனைகளின் தொடக்கம்.

அதைச் சரி செய்ய எப்படி நம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்பது என்று அலசத்தான் இக்கட்டுரை.

ஒரு புறம் துரதிர்ஷ்டம் என்று எண்ணினாலும் நான் இந்தத் தேர்வாணையம் அறிவித்திருந்த அடிப்படை விதிகளை சரிவர படிக்காததும் அதனைப் பின்பற்றாததும்தான் மிக முக்கிய காரணம். இந்தத் தேர்வாணைய அதிகாரிகள் ‘குறிப்பிட்டுள்ள நேரத்தில் மிகச் சரியாக வந்து சேர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

 ஆனால் நான் அதனை அந்த அளவுக்கு முக்கியத்துவம் நிறைந்ததாகக் கருதவில்லை. இந்த அனுபவம் வாழ்க்கையில் நேரம் எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதையும் அதற்கு மரியாதை கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் எனக்குக் கற்றுத் தந்தது. என்னுடைய கவனக்குறைவால் எனது ஓராண்டு உழைப்பு மொத்தமும் வீணாகிவிட்டது. இந்தத் தேர்வை நான் மீண்டும் எழுத இன்னுமொரு வருடம் காத்திருக்க வேண்டும்" என்று மிகுந்த வேதனையோடு சொல்கிறார் பிந்தியா.

இங்கே பிந்தியா மட்டுமல்ல, அவரைப்போல் பலரும் நேரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதில்லை. இது அவசர யுகம். நேரம் யாருக்காவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.

நேரம்தவறாமை என்பது மிக எளிய வார்த்தை. பள்ளியில் ஒரு ப்ராஜக்ட் கொடுத்து அதற்கான கால அவகாசமும் கொடுக்கிறார்கள். இதைச் செய்து முடிக்கும்போது, நேரத்தின் அருமையையும் அன்றாட வாழ்வில் நேரத்திற்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியத்தையும் சேர்த்தே கற்றுக் கொள்கின்றனர். அதே போல் மற்றவரின் நேரத்தை மதிப்பிடக் கற்றுக் கொள்வதுடன் அவர்களுக்கு மரியாதை செய்யவும் கற்கின்றனர்.

நேரம் தவறாமையைக் கற்றுக்கொடுப்போம்!


நேரம் தவறாமையைக் கற்றுக்கொடுப்போம்!
நேரம் தவறாமையைக் கற்றுக்கொடுப்போம்!
நேரம் தவறாமையைக் கற்றுக்கொடுப்போம்!

இயற்கையின் நேரம் தவறாமை

இம்பார்ட்டண்ட்.காம் (importantindia.com) என்ற இணையதளத்தில் விகாஷ் பதாக் என்பவர் இயற்கையின் வழியே நேரம் தவறாமையை இப்படி விவரிக்கிறார்:

‘பூக்கள் வசந்தகாலத்தில் பூக்கும். பூமியோ இதே வசந்தகாலத்தில் பச்சையாடை உடுத்தியது போல் எங்கும் பச்சைப் பசேலென்று பயிர்கள் விளைந்து நிற்கும்.

மல்லியும் முல்லையும் வருடத்தில் 5 மாதங்கள் பூக்கக்கூடியவை. பவளமல்லி முன்னிரவில் பூத்து சூரிய உதயத்துக்கு முன்பே மண்ணில் உதிர்ந்துவிடும். நித்திய மல்லியோ தினம் தினம் பூக்கும். பறித்து சில மணி நேரங்களிலேயே வாடிவிடுவதும் உண்டு. அநிச்சமோ கை பட்டாலே வாடிவிடும். ஒரு வகை ஆர்கிட் மலர்கள் இரவில் பூக்கக் கூடியவை.

இப்படி இந்த இயற்கைக்கும் ஒரு கால அட்டவணை உண்டு. அதற்கேற்றாற்போல் தாவரங்கள் பூக்கும், காய்க்கும் நேரங்களும் மாறிக்கொண்டேதான் இருக்கும். இவையே ஒரு முறையான திட்டமிட்ட நேரத்தின் செயல்பாடுகள்தான். இந்த இயற்கை முறையை நாம் பின்பற்றினாலேபோதும் ஆரோக்கியமான, வலுவான வாழ்க்கையை வாழலாம்.

இது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால் முயன்றால் முடியாதது ஏதுமில்லை அல்லவா! பெற்றோர் பலர் தாங்கள் உரிய நேரத்துக்கு எப்படியாவது அலுவலகம் செல்ல வேண்டும் என்பதற்காக குழந்தைகள் தயாராவதற்கு தாமதமானாலோ அல்லது பள்ளிக்கூடப் பேருந்தைப் பிடிக்க இயலாமல் போனாலோ அவர்களை அவசர அவசரமாக தாங்களே பள்ளியில் கொண்டுபோய் விட்டுவருவதும் இயல்பாய் நடந்து வருகிறது.

நாம் அனைவருமே நேரம் தவறாமையைப் பின்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டவர்கள்தான். ஆனால் பாதிவழியில் பாதை மாறிப் போகிறது அவ்வளவே. இந்நிலையில் குழந்தைகளுக்கு நேரம் தவறாமையின் அவசியத்தைக் கற்றுக் கொடுப்பது சற்றே கடினமான விஷயம்தான்.

நேரம் தவறாமையைக் கற்றுக்கொடுப்போம்!
நேரம் தவறாமையைக் கற்றுக்கொடுப்போம்!
நேரம் தவறாமையைக் கற்றுக்கொடுப்போம்!
நேரம் தவறாமையைக் கற்றுக்கொடுப்போம்!

பிந்தியாவின் செயலை ஒரு எடுத்துக்காட்டாக வைத்து நம் குழந்தைகளுக்கு நேரம் தவறாமையை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, உளவியல் நிபுணர், உளவியலாளர், மனநல ஆலோசகர் இவர்களால் சொல்லப்பட்ட பல்வேறு வழிகளின்மூலம் நம் குழந்தைகளுக்கு நேரம் தவறாமையைக் கற்றுத்தரலாம்.

நேரத்தை எப்படி மதிப்பிடுவது? இதை உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க மிக முக்கியமான வழிமுறைகள்:

நேரம் தவறாமை

செய்தித்தாள் ஒன்றில் எம்ஜிஎம் எழுத்தாளர்கள் பீட்டர் ஸ்காட் மற்றும் பீட்டர் ஜெ மானுவெல் இருவரும் பல்வேறு முறைகளில் பள்ளியும் ஆசிரியரும் குழந்தைகளிடம் இருக்கும் நேரம் தவறாமை பழக்கத்தை எப்படி மேலும் மேலும் அதிகப்படுத்துவது என்பதை குறிப்பிட்டுள்ளனர்.

பள்ளியில் பிள்ளைகள் சரியான நேரத்துக்கு வருவது மட்டும் நேரம் தவறாமையில் சேர்ந்தது அல்ல, கல்வியின் நிலை மற்றும் அவர்களின் நேரம் தவறாமை இவை இரண்டிற்கும் இடையே நேரடித் தொடர்பு உள்ளது.

ஆக, பள்ளியில் கைவினை சார்ந்த விஷயங்கள் ஏதேனும் பிள்ளைகளின் நேரம் தவறாமையுடன் தொடர்புடையதாக இருக்கும் வண்ணம் செய்யும்படி கூறுங்கள்.

நேரம் தவறாமையைக் கற்றுக்கொடுப்போம்!
நேரம் தவறாமையைக் கற்றுக்கொடுப்போம்!


நீங்கள் ஓர் ஆசிரியரா?

பிள்ளைகள் தொடர்ந்து பள்ளிக்கு தாமதமாக வருகின்றனர் என்ற நிலையில் பெற்றோருடன் அடிக்கடி பேசுங்கள்.

அவர்களுக்கு கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்புங்கள் அல்லது இணையதளத்தில் இ தகவல் அனுப்புங்கள்.

இக்குழந்தைகள் காலம்தாழ்த்தி வருவதன் காரணமாக அவர்களின் படிப்பு விஷயத்தில் அவர்கள் எவ்வளவு இழக்கிறார்கள் என்பதையும் சொல்லுங்கள்.

பாராட்டு நேரம்: நேரம் தவறாமல் வரும் குழந்தைகளுக்கு நீங்கள் அளிக்கும் பரிசு அவர்களுக்கு உற்சாகத்தையும், அதிக ஆர்வத்தையும் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

குழு வருகை: பள்ளியில் சிறு சிறு குழுவாக அமைத்து நேரம் தவறாமையின் முக்கியத்துவத்தைக் கூறி அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

குழுவில் ஒருவர் தாமதமாக வந்தால் கூட அத்தனை பேரும் தாமதமாக வந்ததுபோல் கருதப்படுவர் என்ற நிலையில், ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு நேரத்தை சரியாக கடைபிடிப்பர். அத்துடன் குழுவாகச் சேர்ந்து பணியாற்றும் திறனையும் கற்றுக் கொள்வர்.

வகுப்பறை: வகுப்பில் நேரம் தவறாமல் செயல்படும் பிள்ளைகளுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கொடுங்கள். இது மற்ற பிள்ளைகளும் நேரம் தவறாமையை கடைபிடிக்க உதவும்.

புள்ளி விவரங்கள்: நேரம் தவறாமையினால் எப்படி எல்லாம் மென்மேலும் உயரமுடியும் என்பதற்கு, வெற்றி பெற்ற பிரபலங்கள், உறவினர்களில் உயர்ந்தவர்கள், புள்ளி விவரங்கள் இவற்றை கூறுங்கள்.

ஆக, தவறவிட்ட நிமிடங்களை நம்மால் திரும்பப் பெற முடியாது. நேரம் யாருக்காகவும், எதற்காகவும் நிற்பதில்லை. இதை உங்கள் பிள்ளைகளை உணரச் செய்யுங்கள். நேரம் தவறாமையை பிள்ளைகள் வாழ்வில் கடைபிடித்தால் வெற்றிகூட தொட்டுவிடும் தூரம்தான் !

(தமிழில்: சுகுணா ஸ்ரீனிவாசன்)

குழந்தை வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகள், கட்டுரைகளைப் படிக்க விரும்பினால் இங்கே க்ளிக் செய்யவும். Connect with us on Facebook | Twitter | Instagram | YouTube