அப்பாமாரே, உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது எப்படி?

குழந்தைகளுடன் ஆடிப்பாடி விளையாடுவது அப்பாக்களுக்குப் பிடிக்கும். ஆனால் என்ன விளையாடுவது? அதற்கு கொஞ்சம் டிப்ஸ் கிடைத்தால் நன்றாக இருக்குமல்லவா!

By சுகுணா ஸ்ரீனிவாசன்  • 5 min read

அப்பாமாரே, உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது எப்படி?

தலைவலியுடன் பணியிலிருந்து வீடு திரும்புகிறீரா? உங்களுக்காக வீட்டு வாசலில் காத்திருக்கும் உங்கள் குழந்தையின் கைகளில் வலி நிவாரண மருந்தை கொடுத்து உங்கள் நெற்றியின் மேல் மெதுவாக மசாஜ் செய்யச் சொல்லுங்கள். அதே சமயம் "தேங்ஸ்டா குட்டி" என்று சொல்லவும் தவறாதீர்கள். தலைவலி காணாமல் போகும்.

அப்பாமாரே, உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது எப்படி?

இப்போது உங்கள் தலைவலி காணாமல் போய்விட்டதல்லவா. அடுத்து உங்கள் குழந்தையை சந்தோஷப்படுத்தலாமா? எவ்வளவு தூரம் அவர்களை சிரிக்க வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் அவர்களை சிரிக்க வையுங்கள். 

அப்பாமாரே, உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது எப்படி?

உங்கள் குழந்தையை உங்களுடன் சேர்த்துக் கொண்டு பபுள் கேம் என்று சொல்லப்படும் சோப்பு நுரையில் முட்டை முட்டையாக பபுள் விட்டு விளையாடுங்கள். அங்கே உங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கு வேறு இணையே இல்லை.

அப்பாமாரே, உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது எப்படி?

அடுத்து உங்கள் குழந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடனமாடுங்கள். உற்சாகம் உங்கள் இருவரையும் தொற்றிக் கொள்ளும்.

அப்பாமாரே, உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது எப்படி?

அப்பாடி... நடனமாடிக் களைத்துவிட்டீர்களா? கொஞ்சம் இளைப்பாறலாமா ! உங்கள் குழந்தையுடன் கதவுகளில் சார்ட் ஒட்டினால் என்ன? உங்கள் எண்ணங்களை வண்ணங்களாக்கி குழந்தையுடன் சேர்ந்து. அந்த சார்ட் காகிதங்களை உங்கள் குழந்தையை ஒட்டச் செய்யுங்கள்.

அப்பாமாரே, உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது எப்படி?

மிகவும் களைப்பாக இருக்கிறதா? அமைதியாக கட்டில் மேல் அல்லது தரையில் படுத்துக் கொண்டு உங்கள் குழந்தையின் குட்டிக் குட்டி பொம்மை கார்களை உங்கள் முதுகின்மேல் மெதுவாக ஓட்டச் சொல்லுங்கள்.

அப்பாமாரே, உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது எப்படி?

அடுத்து முதுகின் மேல் தூக்கி வைத்துக் கொண்டு வீட்டை ஒரு முறை சுற்றி வாருங்கள். இந்த சமயத்தில் உங்கள் குழந்தையின் சிரிப்பொலியைக் கேட்க வேண்டுமே!

ஒரு வேளை குழந்தைக்கு உயரம் சற்று பயம் என்றால் யானைபோல் அவர்களை ஏற்றிக் கொண்டு சுற்றி வாருங்கள்.

அப்பாமாரே, உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது எப்படி?

ஓடியாடி இளைப்பாறிக் களைத்தாகிவிட்டது. அப்படியானால் கட்டாயம் பசித்திருக்க வேண்டுமே! ஓகே, வயிற்றுக்கு ஏதாவது போடுவோமா! நிலாச் சோறு இந்தக்காலக் குழந்தைகளுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். 

அப்பாமாரே, உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது எப்படி?

சரி, இரவு வேளை சாப்பிட்டு முடித்ததும் அடுத்து பல் துலக்க வேண்டும். உடனே படுக்கச் செல்லாமல், உங்கள் குழந்தையை ஒரு 5 நிமிட நடைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லுங்கள். 

அப்பாமாரே, உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது எப்படி?

இரவு நேரக்கதைகளை உணர்ச்சியுடன், கைகளால் சைகை செய்து குழந்தைகளுடன் சேர்ந்தே படியுங்களேன். இப்படி கதை படிக்கும்போது அந்தக் கதை உயிரோட்டத்துடன் இருக்கும். இது ஜாலியான விஷயம் மட்டுமல்ல, இதன்மூலம் குழந்தைகள் பல விஷயங்களைக் கற்றுக்கொள்வர்.   

குழந்தைகளின் முதல் ஹீரோவான அப்பாக்களுக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!