கொரொனா யுகத்தில் பழங்கள் காய்கறிகளும்

காய்கறிகள் மற்றும் பழங்களை கழுவுதல் குடும்பத்தில் கொரொனா நோய்தொற்றைத் தடுக்க உதவுமா?

By மருத்துவர் ஷ்யாம் குமார் (தமிழில்:சுகுணா ஸ்ரீனிவாசன்)  • 6 min read

கொரொனா யுகத்தில் பழங்கள் காய்கறிகளும்

கொரொனா வைரஸ் காரணமாக நாம் அனைவரும் வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் இருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறோம். எவ்வளவுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றிவந்தாலும் அவை எல்லாவற்றையும் கடந்து கொரொனா வைரஸ் நம் வீட்டுக்குள் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவைதான் காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை சாமான்கள்.

ஆனால், இப்பொருட்களிலிருந்து நோய்தொற்றை எப்படி நீக்குவது?இவற்றை கழுவுதல் மூலமாக தடுத்துவிட முடியுமா? ஒருசில கேள்விகள் வாயிலாக சற்றே அலசுவோம்…

கேள்வி 1

உணவின் வழியே Covid-19 நோய் தொற்று பரவுமா?

கொரொனா யுகத்தில் பழங்கள் காய்கறிகளும்

இல்லை. பரவாது. இன்றுவரை உணவின் வாயிலாக இந்த வைரஸ் பரவியதாக எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

கேள்வி 2

பழங்கள், காய்கறிகளை வாங்கி வந்த உடன் கழுவலாமா?

கொரொனா யுகத்தில் பழங்கள் காய்கறிகளும்

பழங்கள் மற்றும் காய்கறிகளை நீங்கள் உண்பதற்கு முன், சமைப்பதற்கு முன் கழுவுவதே மிகவும் சிறந்தது.

கேள்வி 3

பழங்கள், காய்கறிகளை துணி துவைக்கும் சோப்பினால் சுத்தம் செய்யலாமா?

கொரொனா யுகத்தில் பழங்கள் காய்கறிகளும்

வேண்டாம். அப்படி செய்யாதீர்கள். துணிதுவைக்கும் சோப்பில் இருக்கும் சிலவகை வேதிப்பொருட்கள் காய்கறிகள், பழங்களின் மேல் படிந்து அவை வாயுத் தொல்லைக்கான அறிகுறிக்கு காரணமாகி உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது. அத்துடன் உணவின் சுவையையும் இது பாதிக்கக்கூடும்.

கேள்வி 4

பழங்கள், காய்கறிகளை உப்பு நீரில் கழுவுதல் சிறப்பானதா?

கொரொனா யுகத்தில் பழங்கள் காய்கறிகளும்

ஆம். கண்டிப்பாக. 2% உப்பு நீரினால் பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கழுவும்போது அவற்றின் மேல் இருக்கும் பூச்சிகொல்லி மருந்துகளின் மிச்ச மீதிகூட நீங்கிவிடும்.

கேள்வி 5

பழங்கள், காய்கறிகளை நீரில் ஊறவைப்பது பாதுகாப்பானதா?

கொரொனா யுகத்தில் பழங்கள் காய்கறிகளும்

இல்லை. பாதுகாப்பானது கிடையாது. அதுபோல் செய்யும்போது ஒன்றின் மேல் இருக்கும் மாசு மற்றொன்றுக்கு பரவுவற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

கேள்வி 6

குளிர்ந்த நீர், வெந்நீர் இந்த இரண்டில் பழங்கள், காய்கறிகளை எதில் கழுவுதல் நல்லது?

கொரொனா யுகத்தில் பழங்கள் காய்கறிகளும்

குளிர்ந்த நீரில் பழங்கள், காய்கறிகளை கழுவுவதுதான் எப்போதுமே சிறப்பானது..சூடான நீரில் கழுவினால் காய்கறிகள் வாடிவிடும்.

கேள்வி 7

பழங்கள், காய்கறிகளை சுத்தம் செய்வதற்கான சிறந்தவழி என்ன?

கொரொனா யுகத்தில் பழங்கள் காய்கறிகளும்

குழாயில் நீரைத் திறந்துவிட்டு அதில் காய்கறிகளை மெதுவாக தேய்த்து சுத்தம் செய்யும்போது 90லிருந்து 99 விழுக்காடு கிருமிகளும் பிற மாசுகளும் நீங்கிவிடும்.

அவ்வாறு அல்லாமல் பழங்கள், காய்கறிகளை அப்படியே சாப்பிடும்போது இந்த கிருமிகளும், மாசுகளும் பல்வேறு வகையான நோய்களை ஏற்படுத்தும்.

கேள்வி 8

காய்கறிகள் சுத்தம் செய்யும் உபகரணத்தைப் (vegetable washers) பயன்படுத்தி காய்கறிகள், பழங்களை சுத்தம் செய்வது பாதுகாப்பானதா?

கொரொனா யுகத்தில் பழங்கள் காய்கறிகளும்

ஆம். தீங்கு விளைவிக்காத வகையில் இந்த காய்கறிகள் சுத்தம் செய்யும் உபகரணத்தைப்(vegetable washers) பயன்படுத்தலாம். மாசு மற்றும் தூசுக்களை அகற்றக்கூடிய அல்ட்ராசவுண்ட் அலைகள் மற்றும் ஓசானிசேஷன் போன்ற தொழில் நுட்பம் இதில் பயன்படுப்படுகிறது.

கேள்வி 9

பழங்கள், காய்கறிகளை சுத்தம் செய்யும்போது மேலும் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

கொரொனா யுகத்தில் பழங்கள் காய்கறிகளும்

பழங்கள், காய்கறிகளை சுத்தம் செய்வதற்கு முன்பும் செய்த பின்பும் உங்கள் கைகளை மிதமான வெந்நீரில் சோப்பு போட்டு 20 விநாடிகள் நன்றாகக் கழுவவும்.

அத்துடன் சமையலறையை, அங்கு இருக்கும் காய்கறி வெட்டும் பலகைகள், கத்திகள், ஆகியவற்றை நோய்தொற்று இன்றி பார்த்துக் கொள்ளவும். அவ்வாறு அல்லாதபட்சத்தில் உங்கள் கைகளிலிருந்தே கிருமிகள் பரவுவதுடன் அதுவே COVID-19 அல்லது பிற நோய்களுக்கு வழிவகுக்கும்.

கேள்வி 10

உணவு தொடர்பான பரப்புகளை சுத்தம் செய்யும்  சேனிடைசர் தயாரிப்பது எப்படி?

கொரொனா யுகத்தில் பழங்கள் காய்கறிகளும்

கரொலைன் ப்ளீச் 1 டீஸ்பூன் உடன் 4 கப் நீர் சேர்த்து எந்தப் பரப்பை சுத்தம் செய்ய வேண்டுமோ அந்த இடத்தில் பயன்படுத்தி பின் நீர் விட்டு நன்கு துடைக்கவும். கரொலைன் ப்ளீச் கண்ணுக்குத் தெரியாத சிறுசிறு நுண் கிருமிகளைக்கூட அழிப்பதில் மிகச்சிறந்தது.

ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். பாதுகாப்பாக இருங்கள். வீட்டிலேயே இருங்கள்.