எலும்பை திடப்படுத்துவோம்

எலும்புகளின் ஆரோக்கியம் குறித்து சென்னையின் சிறந்த எலும்பியல் அறுவைசிகிச்சை நிபுணரான ஏ.என். விவேக் நம்மிடம் பகிர்ந்தவற்றிலிருந்து...

By சுகுணா ஸ்ரீனிவாசன்  • 6 min read

எலும்பை திடப்படுத்துவோம்

நம் உடல் நலனுக்கு மிக முக்கியமான ஒன்றாக இருப்பது எலும்புகள்தான். இந்த எலும்புகளின் திடத்தை குழந்தைப் பருவத்திலேயே உறுதி செய்துவிட்டோம் என்றால் பிற்காலத்தில் இது குறித்த பிரச்சனைகள் ஏதேனும் வருமோ என்று அஞ்சத் தேவையில்லை.

எலும்புகளின் முக்கியத்துவம் என்ன?

நம் அனைவருக்கும் மாறிக்கொண்டே இருக்கும் திசுதான் எலும்பு. குறிப்பாகக் குழந்தைகளிடத்தில் இது மிக முக்கியமானது. எலும்புகள்தான் உடலின் கட்டமைப்புக்கான அடிப்படையை உருவாக்குபவை. அதுமட்டுமின்றி, உறுப்புகளின் பாதுகாப்பு, இயக்கம், ரத்த அணுக்களை உருவாக்குதல் (எலும்பு மஜ்ஜையில்), கால்சியம் மற்றும் பிற தாதுகளைச் சேமித்தல் போன்ற முக்கியமான உடலியல் செயல்முறைகளில் முக்கியப் பங்கும் எலும்புகளுக்கு உண்டு.

எலும்புகள் பலவீனம் அடைவது ஏன்?

எலும்பு ஆரோக்கியம் தொடர்பாகக் குழந்தைகளுக்கு ஒருசில பொதுவான குறைபாடுகள் கோளாறுகள் உள்ளன. தவிர, மக்கள் தொகையில் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனை ரிக்கெட்ஸ். ரிக்கெட்ஸ் அல்லது கணைக்கட்டு நோய் என்பது குழந்தைகளின் எலும்புகள் மென்மை அடைந்து அதனால் ஏற்படும் எலும்பு முறிவு அல்லது குறைபாடு ஏற்படுவதைக் குறிக்கிறது.

பொதுவாக உணவில் வைட்டமின் டி குறைவின் காரணமாகக் குழந்தைகளின் வளர்ந்து வரும் எலும்புகள் ரிக்கெட்ஸ் ஆல் மென்மை அடைகின்றன, பலவீனமடைகின்றன. நமக்குத் தேவையான கொழுப்பில் கரையக்கூடிய 4 வைட்டமின்களில் வைட்டமின் டி ஒன்றாகும் (வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே). எனவேதான், வைட்டமின் டி உட்கொள்வதற்கு முன் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவைச் சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. மற்றவை நீரில் கரையக்கூடியவை (வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி போன்றவை).

எலும்பை திடப்படுத்துவோம்

வைட்டமின் டி குறைபாட்டை கிழ்க்கண்ட அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தாமதமான வளர்ச்சி

இடுப்புவலி மற்றும் இடுப்பு பகுதிக்கு மேலும் கால்களிலும் வலி ஏற்படுதல்

பொதுவான பலவீனங்கள்

களைப்பு

தொடர்ச்சியான குளிர்

ஒவ்வாமைக்கு ஆளாகுதல்

அடிக்கடி ஏற்படும் எலும்பு முறிவுகள்

மன அழுத்தம்

பற்களில் சிதைவு, சொத்தை மற்றும் காயம் ஆகியவை.

இந்த வைட்டமினின் நீண்டகாலகுறைபாடு ரிக்கெட்ஸ் என்ற கணைக்கட்டு நோய்க்குக் (எலும்பு மெலிவு நோய்) காரணமாக அமையும்.எலும்பில் வலிகள் முக்கியமாக முதுகு மற்றும் கால்களில் வலி, குறுகிய மற்றும் வளர்ச்சியின் தடுமாற்றம், அடிக்கடி எலும்பு முறிவுகள், தசைப் பிடிப்புகள், முழங்காலில் குறைபாடுகள் (வில்போல் வளைந்த கால்கள் மற்றும் கால் முட்டி), மண்டை, முதுகெலும்பு மற்றும் இடுப்பெலும்பு குறைபாடுகள், பல் பிரச்சனைகள், வயிறு வீக்கமடைதல் போன்ற அறிகுறிகளின் வாயிலாக இதனைக் கண்டறியலாம்.

எனது வழக்கமான எலும்பியல் பயிற்சியில், தெளிவற்ற மற்றும் மாறுபட்ட அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளை நான் காண நேர்ந்தது. இவர்கள் பெரும்பாலும் வைட்டமின் டி குறைவுடன் தொடர்பு இல்லாதவர்களாக இருந்தனர். மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின்படி வசதி படைத்த மக்களிடையே இத்தகைய குறைபாடுகள் பரவுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தவிர. முக்கியமான விஷயம் என்னவென்றால், தற்போது குழந்தைகளும் பெரியவர்களும் வீட்டுக்குள்ளேயேதான் அதிக நேரம் இருக்கின்றனர். சீரான உணவுப் பழக்கம் இல்லாதது, சூரிய ஒளியின் வெளிப்பாடு குறைவு ஆகியவையும் காரணமாகும்.

எலும்பை திடப்படுத்துவோம்

சூரிய ஒளி குறித்து சொல்லும்போது சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் கதிர்களிலிருந்து நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி சத்தை தானாகவே நம் உடல் பெற்றுக் கொள்கிறது. இருப்பினும், எந்த நேரத்தில் வெளிப்படும் சூரியஒளியில் நிற்க வேண்டும்?, எவ்வளவு நேரம் நிற்க வேண்டும்?... இதுபோன்ற பல்வேறு அம்சங்களையும் கவனிக்க வேண்டும்.

சீரான மற்றும் சத்தான உணவுகளை வழங்கவும்,முடிந்தவரை ஜங்க் ஃபுட் என்று சொல்லப்படும் உணவுகளைத் தவிர்க்கவும். அதேபோல் மீன், கடல் உணவுகள், காளான்கள், முட்டையின் மஞ்சள் கரு, மற்றும் சில கொட்டைகள் போன்ற பல்வேறு உணவுப் பொருட்களிலும் வைட்டமின் டி கிடைக்கிறது.

எலும்பை திடப்படுத்துவோம்

சுருக்கமாகச் சொல்லப்போனால், குழந்தைகளை வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்குவிப்பது நல்லது. வைட்டமின் டி மற்றும் கால்ஷியம் சப்ளிமெண்ட் ஆகியவற்றை தவறாது எடுத்துக் கொள்ளவும். குழந்தைகள் ஏதேனும் வலி என்று சொல்லும்போது அதைச் சற்றே கவனத்துடன் கையாளுங்கள். 

கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் எலும்பு ஆரோக்கியத்துக்கு மிக முக்கியத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பேட்டுகளை உட்கொள்கிறோம், ஆனால், வைட்டமின் டி இருந்தால்தான் இந்த ஊட்டச்சத்துக்கள் சரிவர செயல்பட முடியும். எனவே, கால்ஷியத்துடன் வைட்டமின் டி சப்ளிமெண்ட்டுகளையும் எடுத்துக்கொள்வது சிறப்பானது. ஆனால், வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்வதற்கு முன் உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். 

More for you

வைட்டமின் - D ஏன் முக்கியம்?

குழந்தைகளை தினமும் காலை நேரத்தில் ஓரு சில நிமிடங்கள் வெயிலில் காட்டச் சொல்வது ஏன் தெரியுமா?


திவ்யா சாய்நாதன்  • 5 min read

பெரியோருக்கு மரியாதை

மூத்தோர் சொல்லும், முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும் என்று சொல்வதுண்டு. அதாவது முழு நெல்லிக்காய...


சுகுணா ஸ்ரீனிவாசன்  • 2 min read

பால் போல பல்லு ஒண்ணு

குழந்தையின் வளர்ச்சிப் படிநிலையில் முக்கியமானது பால் பல் முளைக்கும் பருவம்தான். அப்போது என்னவெல்லாம் நிகழ்கிறது?; ந...


சுகுணா ஸ்ரீனிவாசன்  • 2 min read

கதை சொல்லும் தேவதைகள்

பெற்றோர் கதை சொன்னது அந்தக்காலம். பிள்ளைகள் கதை சொல்ல, நாம் கேட்பது இந்தக்காலம். குழந்தைகளிடம் கதை சொல்லும் திறனை ம...


சுகுணா ஸ்ரீனிவாசன்  • 2 min read