பள்ளிகள் திறந்தாலும் உடனடியாகப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப 92 % பெற்றோர் தயாராக இல்லை: ஆய்வு முடிவு

பேரண்ட் சர்க்கிள் நாடு தழுவிய அளவில் நடத்திய ஆய்வில், பெற்றோர் மத்தியில் கொரொனா அச்சம் தொடர்வது தெரிய வந்திருக்கிறது.

By செல்லமே குழு


கொரொனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடெங்கும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதித்திக்கப் பட்டிருப்பதை நாம் அறிவோம். இது எந்த அளவுக்கு இந்திய பெற்றோரின் மன நிலையிலும் எதிர்காலம் குறித்த அவர்களது பார்வையிலும்தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது?

இதனை அறிய பேரண்ட் சர்க்கிள், நாடு தழுவிய அளவில் விரிவான ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் மொத்தம் 12,000 பேர் கலந்துகொண்டனர்.

பள்ளிகள் திறந்தாலும் உடனடியாகப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப 92 % பெற்றோர் தயாராக இல்லை: ஆய்வு முடிவு
Image by pixabay.com/akshayapatra

 பள்ளி திறப்பு, மற்ற குழந்தைகளுடனான விளையாட்டு, பிறந்த நாள் விருந்து, மால்கள், திரைப்படங்கள் , உணவகங்களுக்குச் செல்வது, சிறப்புவகுப்புகளுக்குச் செல்வது, விளையாட்டு, உடற்பயிற்சி, பொதுப் போக்குவரத்து, கோடைவிடுமுறை பயணங்கள்  என்று இவை அனைத்தையும் உள்ளடக்கிய- குழந்தைகளின் வாழ்க்கை குறித்த ஒட்டுமொத்த சர்வே இது.

இந்தக்  கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டோரின் பதில்களை வைத்துப் பார்க்கும் பொழுது, பெற்றோர் மத்தியில் உள்ள அச்சத்தை நன்கு அறிய முடிந்தது. இந்த அச்சம் உடனடியாக நீங்கிவிடும் என்று சொல்ல முடியாது.

பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதத் தொடக்கத்திலேயே மூடிவிட்டதால் கற்பித்தலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலும்கூட பெற்றோர் உடனடியாக தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயாராக இல்லை. வைரஸ் தாக்கம் முழுவதுமாக கட்டுக்குள் வந்த பிறகு பள்ளிக்கு அனுப்புவதே சரியாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

சுமார் 50 நாட்கள் கடும் ஊரடங்கு உத்தரவை அடுத்து பள்ளிகள் திறந்தாலும் பிறகும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப 92 % பெற்றோர் விரும்பவில்லை.

பள்ளிகள் திறந்தாலும் உடனடியாகப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப 92 % பெற்றோர் தயாராக இல்லை: ஆய்வு முடிவு
Image by pixabay.com/users/sasint

குறிப்பிட்ட நகரம் அல்லது கொரொனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி என்றவேறுபாடில்லாமல் எல்லா இடங்களிலும் இந்நிலையைப் பார்க்க முடிந்தது.

பள்ளிகளின் மறு திறப்புக்குபின், ஒரு மாதம் சூழ்நிலைகளை நன்கு ஆராய்ந்த பிறகு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்புவதாக 56% பெற்றோர் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் 8 % பெற்றோர் உடனடியாக தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாராக உள்ளனர். வீட்டிலிருந்து பிள்ளைகள் படிக்கும் ஹோம் ஸ்கூலிங் முறை நம் நாட்டில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கவில்லை. என்றபோதும், வியப்பூட்டும் வகையில் 15% பேர் இம்முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு நோ!

பள்ளிகள் திறந்தாலும் உடனடியாகப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப 92 % பெற்றோர் தயாராக இல்லை: ஆய்வு முடிவு

Image by Bob Dmyt from Pixabay 

மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாடுவது, பிறந்த நாள் கொண்டாட்டங்கள், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி, கோடை சுற்றுலா, மால்கள், திரைப்படங்கள், உணவகங்களுக்குச் செல்வது போன்ற குழந்தைகளின் வாழ்வில் முக்கியமான அங்கங்களை உள்ளடக்கிய சமூக வாழ்க்கையை இந்த ஆய்வு ஆராய்ந்திருக்கிறது.

தற்போதைய அச்சத்தின் காரணமாக 64% பெற்றோர் இவ்வாண்டில் தங்கள் குழந்தைகளைப் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு அனுப்பத் தயாராக இல்லை என்பது தெரியவந்துள்ளது. உணவகங்கள் மால்கள் மற்றும் திரையரங்குகளுக்குச் செல்வது ஆகியவற்றையும் இவ்வாண்டில் தவிர்க்கவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். 1% பேருக்குக் குறைவானவர்கள் மட்டுமே இங்கு செல்லத் தயாராக உள்ளனர்.

உணவகங்கள், மால்கள்

பள்ளிகள் திறந்தாலும் உடனடியாகப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப 92 % பெற்றோர் தயாராக இல்லை: ஆய்வு முடிவு

Image by Mike Mike from Pixabay 

அடுத்து வரும் நாட்களில் மால்கள் மற்றும் திரையரங்குகளுக்குச் செல்ல 50% பேர் தயாரில்லை (பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தாலும்கூட). இவ்வாண்டின் மீதமுள்ள நாட்களில் உணவகங்களுக்கு சாப்பிட செல்லப் போவதில்லை என்று 49% பேர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 33% பேர் இதில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்கின்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தான ஐயத்தாலோ, அல்லது எதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தாலும் இம்முடிவைப் பெற்றோர் எடுக்கின்றனர்.

நோய்த்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 17% பேர் திருப்தி தெரிவித்திருக்கின்றனர்.

சமூக இடைவெளியுடன் விளையாட்டு:

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும்கூட குழந்தைகளை  அவர்களது நண்பர்களுடன் விளையாட உடனடியாக அனுமதிக்க பெற்றோர் பலரும் தயாராக இல்லை. சூழ் நிலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொருத்து இது குறித்து முடிவெடுக்க முடியும் என்று 50 % பெற்றோர் கருதுகின்றனர். அதே நேரத்தில் சமூக இடைவெளியை சரியாகப் பின்பற்றினால் தங்கள் பிள்ளைகளை நண்பர்களுடன் விளையாட பூங்காக்களுக்கு அனுப்ப 35 % பெற்றோர் தயாராக உள்ளனர்.

குழு விளையாட்டு வேண்டாம்!

இந்த ஆய்வில் கலந்து கொண்டோரில் 45% பேர் அடுத்து வரும் 6 மாதங்களுக்கு குழந்தைகளுக்கு விளையாட்டுக்கள் தேவையில்லை என்கின்றனர். அதே நேரத்தில், தனி நபர் விளையாட்டுகளுக்கு 25% பேர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

குடும்பச் சுற்றுலா

பயணத்தின் போது எதிர்கொள்ளவேண்டிய கோவிட்-19 நோய்ப் பரவல் ரிஸ்க் மற்றும் எதிர்வரும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் குடும்பச் சுற்றுலாக்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபிறகு சுற்றுலா செல்ல 1% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 57% பேர், இந்த சூழல், பயணத்துக்கு ஏற்றதல்ல என்று எண்ணுகின்றனர். சுற்றுலாவுக்கு செலவழிப்பதற்கு பதிலாக, பல்வேறு துறைகளிலும் ஏற்பட வாய்ப்புள்ள, வேலையிழப்பு, ஊதியக் குறைப்பு முதலிய பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்காக சேமிப்பில் கவனம் செலுத்த 30% பேர் விரும்புகின்றனர்.

தேசிய அளவிலான சர்வே முடிவுகள் மற்றும் சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா,தில்லி நகரங்களின் புள்ளி விபரங்கள் ஆகியவற்றை இங்கு வழங்குகிறோம்.

தேசிய அளவிலான முடிவுகள்

பள்ளி மறுதிறப்பு: பள்ளிகள் மறுபடி திறந்தபிறகு 56 % பெற்றோர் ஒரு மாதமாவது சூழ்நிலையை கவனித்த பிறகு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியும் என்று தெரிவித்துள்ளனர். அடுத்த ஆறு மாதங்களுக்கு பிள்ளைகளைஅனுப்ப 21% பெற்றோர் தயாராக இல்லை. 15% பேர் ஹோம் ஸ்கூலிங் முறையைப் பரிசீலிக்கின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள்: இவ்வாண்டின் மீதமுள்ள நாட்களில் 64% பெற்றோர் தங்களது குழந்தைகளை பிறந்தநாள் விருந்துகளுக்கு அனுப்பப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாகப் பின்பற்றப்பட்டால் விருந்துகளுக்கு அனுப்ப 35% பெற்றோர் தயாராக உள்ளனர்.

மற்ற குழந்தைகளுடன் விளையாட்டு: சமூக இடைவெளியை சரியாக பின்பற்றினால் 35% பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட அனுமதிக்கத் தயாராக உள்ளனர். 50% பெற்றோரோ,சூழ்நிலையைப் பொறுத்திருந்து பார்த்தே முடிவு எடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

மால்கள், திரைப்படங்கள்: இனி வரும் நாட்களில் மால்கள் மற்றும் திரைப்படங்களுக்குச் செல்லப் போவதில்லை என்று 50% பேர் தெரிவித்துள்ளனர். 0.5%க்கும் குறைவானவர்களே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு இங்கு செல்ல விரும்புகின்றனர்.

உணவகங்களுக்குச் செல்லுதல்: ஊரடங்கு முடிந்த பிறகு அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு உணவகங்களுக்குச் செல்லத் தயாராக இல்லை என்று 83 % பேர் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் திறந்தாலும் உடனடியாகப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப 92 % பெற்றோர் தயாராக இல்லை: ஆய்வு முடிவு

Image by Esa Niemelä from Pixabay 

சிறப்பு வகுப்புகள்: 26% பேர் ஆன்லைன் வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர். சூழ்நிலை சரியாவதற்காக 43% பேர் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

விளையாட்டு, உடற்பயிற்சி: அடுத்த ஆறு மாதங்களுக்கு விளையாட்டு நடவடிக்கைகளில் தம் குழந்தைகள் ஈடுபடப் போவதில்லை என்று 43 % பேர் தெரிவித்துள்ளனர். தனிநபர் விளையாட்டுக்களை விளையாடலாம் என்று 25% ஆயிரம் பேர் தெரிவித்துள்ளனர். 26% பேர், இது தொடர்பாக முடிவெடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் திறந்தாலும் உடனடியாகப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப 92 % பெற்றோர் தயாராக இல்லை: ஆய்வு முடிவு

Image by pasja1000 from Pixabay 

சுற்றுலா: எதிர்வரும் காலங்களில் சுற்றுலா செல்வது பாதுகாப்பற்றது என்று 57 % பேர் கருதுகின்றனர். 

நிச்சயமற்ற பொருளாதாரச் சூழலை எதிர் கொள்வதற்காக சேமிக்க வேண்டும் என்று 30 % பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பொதுப் போக்குவரத்து: பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது ரிஸ்க் என்று 43 % பேர் தெரிவித்துள்ளனர்.

கை குலுக்குவது: கை குலுக்குவதை விட வணக்கம் சொல்வது பாதுகாப்பானது என்று 70 % குழந்தைகள் நம்புகின்றனர்.

நகரங்கள் வாரியாகப் புள்ளி விபரங்கள்

பெங்களூரு:

பள்ளிகள் மறுதிறப்பு: பள்ளிகள் மறுபடி திறந்த பிறகு ஒரு மாதத்துக்குச் சூழ்நிலையை கவனித்த பிறகே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியும் என்று 56% பேர் தெரிவித்துள்ளனர். 21% பேர் அடுத்த ஆறு மாதங்களுக்கு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்று கருதுகின்றனர். ஹோம் ஸ்கூலிங் முறையை பரிசீலிப்பதாக 12 % பேர் தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள்: இவ்வாண்டின் அடுத்து வரும் நாட்களில் தங்கள் பிள்ளைகளை பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு அனுப்பப் போவதில்லை என்று 55% பெற்றோர் கூறியுள்ளனர். சமூக இடைவெளி உறுதிப்படுத்தப்பட்டால் தங்கள் பிள்ளைகளை பிறந்தநாள் விருந்துக்கு அனுப்ப 44% பெற்றோர் தயாராக உள்ளனர்.

மற்ற குழந்தைகளுடன் விளையாட்டு: சமூக இடைவெளி உறுதிப்படுத்தப் பட்டால் மற்ற குழந்தையுடன் தங்கள் குழந்தைகளை விளையாடஅனுமதிப்பதாக 38% பெற்றோர் நமது ஆய்வில் தெரிவித்துள்ளனர். சூழ்நிலையைப் பொறுத்திருந்து பார்த்து முடிவு எடுக்க இருப்பதாக 44 % பெற்றோர் கூறியுள்ளனர்.

மால்கள், திரையரங்கங்கள்: இவ்வாண்டின் அடுத்து வரும் நாட்களில் மால்களுக்கு செல்லப் போவதில்லை என்று 52  பெற்றோர் கூறியுள்ளனர். 1% பேரே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு இங்கு செல்ல விரும்புகின்றனர்.

உணவகங்கள்: அடுத்த மூன்று மாதங்களுக்கு உணவகங்களுக்கு செல்லப் போவதில்லை என்று 80% பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு வகுப்புகள்: 28 % பெற்றோரின் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளுக்குப் பழகிவிட்டனர். 36% பேர், சூழ்நிலை சரியான பிறகு வழக்கமான வகுப்புகளுக்கு குழந்தைகளை அனுப்ப தயாராக உள்ளனர்.

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி: அடுத்த ஆறு மாதங்களுக்கு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளுக்கு பிள்ளைகளை அனுப்பப் போவதில்லை என்று 43% பெற்றோர் தெரிவித்துள்ளனர். குழு விளையாட்டுக்களைத் தவிர்த்துவிட்டு தனிநபர் விளையாட்டுகளுக்குப் பிள்ளைகளை அனுப்பத் தயாராக உள்ளதாக 25% பெற்றோர் தெரிவித்துள்ளனர். 26% பெற்றோர் இவ்விஷயத்தில் முடிவெடுக்க இயலவில்லை என்று கூறியுள்ளனர்.

சுற்றுலா: குடும்ப சுற்றுலா செல்வது ரிஸ்க் என்று 59 % பெற்றோர் நம் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் திறந்தாலும் உடனடியாகப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப 92 % பெற்றோர் தயாராக இல்லை: ஆய்வு முடிவு

Image by Rehan Ansari from Pixabay 

பொதுப் போக்குவரத்து: குறிப்பிட்ட காலம்வரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது பாதுகாப்பற்றது என்று 43 % பேர் கூறியுள்ளனர்.

கை குலுக்குவது: 70% குழந்தைகள் கை குலுக்குவதற்குப் பதிலாக வணக்கம் சொல்வதை விரும்புகின்றனர்.

மும்பை:

பள்ளிகள் மறுதிறப்பு: பள்ளிகள் திறந்தாலும் தங்கள் பிள்ளைகளை அனுப்புவதற்கு முன் பாக ஒரு மாதத்துக்காவது சூழ்நிலைகளை உற்று கவனிக்க இருப்பதாக பேரன்ட் சர்க்கிள் ஆய்வில் கலந்துகொண்ட 54 % பெற்றோர் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆறு மாதங்களுக்குப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை என்று 24 % பெற்றோர் கூறியுள்ளனர். 14% பேர், வீட்டிலிருந்தே குழந்தைகளைப் படிக்க வைப்பதைத் தெரிவு செய்கின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள்: இவ்வாண்டில் எஞ்சியுள்ள நாட்களில் தங்கள் பிள்ளைகளை பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு அனுப்பப் போவதில்லை என்று 60% பெற்றோர் கூறியுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப் பட்டால் தங்கள் பிள்ளைகளை கொண்டாட்டங்களுக்கு அனுப்ப தயார் என்று 39% பெற்றோர் சொல்கின்றனர்.

மற்ற குழந்தைகளுடன் விளையாட்டு: சமூக இடைவெளி சரியாகப் பின்பற்றப்பட்டால் தங்களது குழந்தைகளை அவர்களின் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட அனுமதிக்க விரும்புவதாக 32 % பெற்றோர் தெரிவித்துள்ளனர். 55 % பெற்றோரோ கோவிட்19 சூழலைப் பார்த்தபிறகே முடிவு எடுக்க முடியும் என்கின்றனர்.

மால்கள், திரையரங்கங்கள்: மால்கள் மற்றும் திரையரங்குகளுக்கு செல்ல மாட்டோம் என 43 % பேர் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் கலந்து கொண்டோரில் 0.16% பேர் ஊரடங்கு முடிவடைந்த பிறகு இங்கு செல்ல விரும்புகின்றனர்.

உணவகங்கள்: 78% பேர் உணவகங்களுக்கு, குறைந்தது மூன்று மாதங்களுக்கு செல்வதை தவிர்ப்பதாகஇருப்பதாக சொல்கின்றனர்.

சிறப்பு வகுப்புகள்: 25 % குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு பரிச்சயமாகி விட்டனர். 44 % பேர் சூழ்நிலையும் சரி ஆகட்டும் என்று காத்திருக்கின்றனர்.

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி: அடுத்த ஆறு மாதங்களுக்கு விளையாட்டுக்கள் தேவையில்லை என்று 43 % பேர் கூறியுள்ளனர். 25% பேர் விளையாட அனுமதிக்கலாம் என்றும் 27% பேர் முடிவெடுக்க இயலவில்லை என்றும் கூறியுள்ளனர்.

சுற்றுலா: இன்றைய சூழலில் சுற்றுலாவுக்கென குடும்பமாக பயணம் செய்வது பாதுகாப்பற்றது என்று 51 % பேர் தெரிவித்துள்ளனர்.

பொதுப் போக்குவரத்து: குறிப்பிட்ட காலம்வரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது பாதுகாப்பற்றது என்று 37% பேர் கருதுகின்றனர்.


கைகுலுக்குவது: 65% பேர் கை குலுக்குவதற்கு மாறாக வணக்கம் சொல்வதை விரும்புகின்றனர்.

சென்னை:

பள்ளி மறுதிறப்பு: பள்ளிகள் மறுபடி திறக்கப்பட்டாலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பாக ஒரு மாதமாவது உற்று நோக்க வேண்டும் என்று 54% பேர் கருதுகின்றனர். அடுத்த ஆறு மாதங்களுக்கு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்று 22 %ம் பேர் நினைக்கின்றனர். 11 %ம் பேர் ஹோம் ஸ்கூலிங் முறையை ஒரு மாற்று வாய்ப்பாகக் கருதுகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள்: 2020இல் எஞ்சிய நாட்களில் தங்கள் குழந்தைகளை பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு அனுப்பப் போவதில்லை என்று 66 % பெற்றோர் தெரிவிக்க்கின்றனர். சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால் தங்கள் பிள்ளைகளை இத்தகைய விருந்துகளுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக 34% பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மற்ற குழந்தைகளுடன் விளையாட்டு: இடைவெளி பின்பற்றப்பட்டால் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தையுடன் விளையாட அனுமதிக்கஇருப்பதாக 39 % பெற்றோர் தெரிவித்துள்ளனர். சூழ்நிலை பொறுத்தே முடிவெடுக்கலாம் என்று 44% பெற்றோர் கூறுகின்றனர்.

மால்கள், திரையரங்கங்கள்: 2020ல் மீதமுள்ள நாட்களில் மால்கள் மற்றும் திரையரங்குகளுக்குச் செல்லப் போவதில்லை என்று 59% பெற்றோர் தெரிவிக்கின்றனர். 1 % க்கும் குறைவானவர்களே இங்கு செல்ல விரும்புவதாகச் சொல்கின்றனர்.

பள்ளிகள் திறந்தாலும் உடனடியாகப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப 92 % பெற்றோர் தயாராக இல்லை: ஆய்வு முடிவு

Image by RealAKP from Pixabay 

உணவகங்கள்: ஊரடங்கு முடிந்த பிறகுகூட அடுத்த மூன்று மாதங்களுக்கு உணவகங்களுக்கு செல்லப் போவதில்லை என்று 86% பெற்றோர் கூறுகின்றனர்.

சிறப்பு வகுப்புகள்:

26% குழந்தைகள் ஆன்லைன் ஆக்டிவிட்டி வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். 38% பேர் சூழ்நிலை சரியான பிறகு சிறப்பு வகுப்புகளுக்குச் செல்லலாம் என்று கருதுகின்றனர் .

விளையாட்டு: அடுத்த ஆறு மாதங்களுக்கு விளையாட்டு நடவடிக்கைகள் தேவை இல்லை என்று 43% பெற்றோர் சொல்கின்றனர். இந்த ஆய்வில் கலந்து கொண்டோரில் 29% பேர் குழு விளையாட்டுக்களுக்கு மாற்றாக தனிநபர் விளையாட்டுக்களில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம் என்கின்றனர். இவ்விஷயத்தில் முடிவெடுக்க முடியவில்லை என்று 22% பேர் கூறுகின்றனர்.

சுற்றுலா: 63% பேர் குடும்ப சுற்றுலாப் பயணம் பாதுகாப்பற்றது என்று கருதுகின்றனர்.

பொதுப் போக்குவரத்து: குறிப்பிட்ட காலத்துக்கு பொதுப் போக்குவரத்துப் பயணம் ரிஸ்க் மிகுந்தது என்று 44% பேர் எண்ணுகின்றனர்.

கை குலுக்குவது: 69%குழந்தைகள் கை குலுக்குவதைவிட வணக்கம் சொல்வதை விரும்புகின்றனர்.

கொல்கத்தா:

பள்ளி மறுதிறப்பு:

பள்ளிகள் மறுபடி திறந்தாலும் ஒரு மாதத்துக்கு நிலைமையை கவனித்தாக வேண்டும் என்று 57% பெற்றோர் கூறுகின்றனர். ஆறு மாதத்துக்கு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று 20% பெற்றோர் நினைக்கின்றனர். 16% பேர் மட்டுமே ஹோம் ஸ்கூலிங் முறையை ஒருமாற்றாகக் கருதுகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள்: இவ்வாண்டு மீதமுள்ள நாட்களில் தங்களது பிள்ளைகளைப் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு அனுப்பப் போவதில்லை என்று 69% பெற்றோர் கூறுகின்றனர். சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டால் தங்கள் குழந்தைகளை அவ்விருந்துகளுக்கு அனுப்ப 31% பெற்றோர் தயார்.

மற்ற குழந்தைகளுடன் விளையாட்டு: சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டால் தங்களது குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் விளையாட அனுமதிக்க 30% பெற்றோர் விரும்புகின்றனர். 56% பேர், சூழல் சரியாகட்டும் என்கின்றனர்.

மால்கள், திரையரங்குகள்: இவ்வாண்டில் எஞ்சிய மாதங்களுக்கு மால்கள் மற்றும் திரையரங்குகளுக்குச் செல்லப் போவதில்லை என்று 47% பெற்றோர் கூறுகின்றனர். 0.21% பேர் மட்டும் நிலைமை சரியானதும் இங்கெல்லாம் செல்ல விரும்புகின்றனர்.

உணவகங்கள்: ஊரடங்கு முடிந்த பிறகும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு உணவகங்களுக்கு செல்லப்போவதில்லை என்று 82% பேர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

சிறப்பு வகுப்புகள்: 31% குழந்தைகள் ஆன்லைன் ஆக்டிவிட்டி வகுப்புகளுக்கு மாறியுள்ளனர். 40% பேர் நிலைமை சீராகும்வரை காத்திருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி: அடுத்த ஆறு மாதங்களுக்கு விளையாட்டுக்களில் பிள்ளைகளை ஈடுபடுத்தப் போவதில்லை என்று 46%பெற்றோர் கூறுகின்றனர். அதேநேரத்தில் 22% பெற்றோர் தனிநபர் விளையாட்டுக்களில் குழந்தைகளை அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளனர். 30% பேர் இவ்விஷயத்தில் முடிவெடுக்க முடியவில்லை என்று கூறுகின்றனர்.

சுற்றுலா: 53 % பேர் விடுமுறை சுற்றுலாவைத் தற்போது மேற்கொள்வது ரிஸ்க் என்று தெரிவித்துள்ளனர்.

பொதுப் போக்குவரத்து: குறிப்பிட்ட காலகட்டம் வரை இதைப் பயன்படுத்துவது பாதுகாப்பற்றது என்று 39 % பெற்றோர் இந்த ஆய்வில் கருத்து தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் திறந்தாலும் உடனடியாகப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப 92 % பெற்றோர் தயாராக இல்லை: ஆய்வு முடிவு

கை குலுக்குவது: கை குலுக்குவதற்குப் பதிலாக வணக்கம் சொல்வதையே 67% குழந்தைகள் விரும்புகின்றனர்.

ஹைதராபாத்

 பள்ளி மறுதிறப்பு: பள்ளிகள் திறக்கப்பட்டாலும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பாக சூழ்நிலையை ஒரு மாதம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று 53% பெற்றோர் கருதுகின்றனர். ஆறுமாதங்களுக்கு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று 22% பெற்றோர் விரும்புகின்றனர். 18% பேர் ஹோம் ஸ்கூலிங் முறையை ஒரு மாற்றாகக் கருதுகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள்: இவ்வாண்டில் அடுத்து வரும் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு, தங்கள் பிள்ளைகளை அனுப்பப் போவதில்லை என்று 58 % பெற்றோர் கூறியுள்ளனர். சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருந்தால் தங்கள் பிள்ளைகளை அத்தகைய விருந்துகளுக்கு அனுப்ப இருப்பதாக 41% பெற்றோர் கூறியுள்ளனர்.

மற்ற குழந்தைகளுடன் விளையாட்டு: சமூக இடைவெளி உறுதிப்படுத்தப்பட்டால் தங்களது குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் விளையாட அனுமதிக்க இருப்பதாக 42 % பெற்றோர் கூறுகின்றனர். கோவிட் 19 சூழலைப் பொறுத்து இவ்விஷயத்தில் முடிவு எடுக்கலாம் என்று 42 % பெற்றோர் நமது ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

மால்கள், திரையரங்கங்கள்: 54 % பேர் மால்கள் மற்றும் திரையரங்குகளுக்குச் செல்லப் போவதில்லை என்று நமது ஆய்வில் கூறியுள்ளனர். 0.2 1% பேர் மட்டும் ஊரடங்கு முடிவடைந்த பிறகு இங்கெல்லாம் செல்ல இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்

உணவகங்கள்: ஊரடங்கு முடிந்த அடுத்த மூன்று மாதங்களுக்கு உணவகங்களுக்குச் செல்லப் போவதில்லை என்று 84% பேர் நமது ஆய்வில் கூறியுள்ளனர்.

சிறப்பு வகுப்புகள்: 30 % குழந்தைகள் ஆன்லைனில் ஆக்டிவிட்டி வகுப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். 35% பேர், சூழ்நிலை சரியாகும் வரை காத்திருக்கலாம் என்று நினைக்கின்றனர்.

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி: அடுத்த ஆறு மாதம் விளையாட்டுக்களுக்கு பிள்ளைகளை அனுமதிக்கபோவதில்லை என்று 45% பெற்றோர் கூறியுள்ளனர். 26 % பெற்றோர் தனிநபர் விளையாட்டுக்களுக்கு அனுமதிக்கலாம் என்றும் 22% பேர் இவ்விஷயத்தில் முடிவெடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் திறந்தாலும் உடனடியாகப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப 92 % பெற்றோர் தயாராக இல்லை: ஆய்வு முடிவு

சுற்றுலா: தற்போதைய சூழலில் குடும்ப சுற்றுலா செல்வது ரிஸ்க் என்று 58% பெற்றோர் கருதுகின்றனர்.

பொதுப் போக்குவரத்து: குறிப்பிட்ட காலம் வரை பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பற்றது என்று 39 % பெற்றோர் நம்மிடம் தெரிவித்துள்ளனர்.

கை குலுக்குவது: கைகுலுக்குவதற்கு மாற்றாக வணக்கம் செல்வதையே 72 % குழந்தைகள் விரும்புகின்றனர்.

தில்லி

பள்ளிகள் மறுதிறப்பு: பள்ளிகள் திறக்கப்பட்டாலும் குழந்தைகளை அனுப்புவதற்கு முன்பாக ஒரு மாதமாவது சூழ்நிலையை உற்றுநோக்க வேண்டும் என்று 53% பெற்றோர் கருதுகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை ஆறுமாதங்களுக்கு தள்ளிப்போட வேண்டும் என்று 24% பேர் நினைக்கின்றனர். 18% பேர் ஹோம் ஸ்கூலிங் முறையை ஒரு மாற்றாகப் பாவிக்கின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள்: அடுத்து வரும் நாட்களில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பப்போவதில்லை என்று 68% பெற்றோர் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர். சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டால் பிள்ளைகளை அங்கு அனுப்ப தயார் என்று 32% பெற்றோர் கூறுகின்றனர்.

மற்ற குழந்தைகளுடன் விளையாட்டு: இடைவெளி பின்பற்றப்பட்டால் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் விளையாட அனுப்ப 30% பெற்றோர் தயாராக இருக்கின்றனர். 53 % பெற்றோர் கோவிட்-19 சூழலை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

மால்கள், திரையரங்குகள்: மால்கள் மற்றும் திரையரங்குகளுக்குச் செல்லப் போவதில்லை என்று 48% பெற்றோர் கூறியுள்ளனர். ஊரடங்கு முடிந்தபிறகு அங்கெல்லாம் செல்ல 1% பேருக்கும் குறைவானவர்களே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

உணவகங்கள்: 85% பெற்றோர் ஊரடங்கு முடிவடைந்த பிறகு குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்காவது உணவகங்களுக்குச் செல்லப் போவதில்லை என்று சொல்லியிருக்கின்றனர்.

சிறப்பு வகுப்புகள்: 26% குழந்தைகள் இணைய வழி சிறப்பு வகுப்புகளுக்கு தயாராகிவிட்டனர். நிலைமை சரியாகும்வரை சிறப்பு வகுப்புகளைத் தள்ளிப்போடலாம் என்று 46% பெற்றோர் நினைக்கின்றனர்.

விளையாட்டுக்கள் மற்றும் உடற்பயிற்சி: அடுத்த ஆறு மாதங்களுக்கு விளையாட்டுகளுக்கு அனுமதிக்கப் போவதில்லை என்று 44% பெற்றோர் நம்மிடம் கூறியிருக்கின்றனர். 23%பேர் விளையாட்டுக்களுக்கு பிள்ளைகளை அனுமதிக்கலாம் என்கின்றனர். 30% பேரால் இவ்விஷயத்தில் முடிவெடுக்க இயலவில்லை என்று தெரிகிறது.

சுற்றுலா: 57% பெற்றோர் தற்போது குடும்ப சுற்றுலா செல்வது ரிஸ்க் என்று கருதுகிறார்கள்.

பொதுப் போக்குவரத்து: குறிப்பிட்ட காலம்வரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பற்றது என்று 48% பெற்றோர் இந்த ஆய்வில் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

கைகுலுக்குவது: 69% குழந்தைகள் கைகுலுக்குவதற்குப் பதிலாக வணக்கம் சொல்வதை விரும்புகின்றனர்.

பள்ளிகள் திறந்தாலும் உடனடியாகப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப 92 % பெற்றோர் தயாராக இல்லை: ஆய்வு முடிவு
திருமதி.நளினா ராமலட்சுமி, நிறுவனர், மேலாண் இயக்குநர்-பேரண்ட் சர்க்கிள்.

பேரண்ட் சர்க்கிளின் மேலாண்மை இயக்குனரும் நிறுவனருமான திருமதி நளினா ராமலட்சுமி இது குறித்து பேசுகையில், “ இன்றைய கொரொனா சுற்றுச்சூழலில் பெரும்பாலான பெற்றோர் கவலையுடனும் நிச்சயமற்ற மனநி்லையுடனும் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை. பள்ளிகள், குழு நடவடிக்கைகள், பொது இடங்களில் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். மாறாக, சூழல் சரியாகும் வரை குழந்தைகளை வீடுகளிலேயே பாதுகாப்பாக வைத்திருக்கவே அவர்கள் விரும்புகின்றனர். இடைவெளியை கடைபிடித்தல், கைகளைக் கழுவுதல், முகமூடிகளை அணிவது முதலிய நடவடிக்கைகள் மூலம் எதிர்வரும் காலங்களிலும் நமது குழந்தைகள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாத்தே ஆக வேண்டும்” என்றார்.

பேரண்ட் சர்க்கிள் குறித்து

குழந்தை வளர்ப்புத்துறையில் www.parentcircle.com, நாட்டின் முதன்மை தளம் ஆகும். 2011ல் அச்சு இதழாகத் தொடங்கிய பேரண்ட் சர்க்கிள், தற்போது வலுவான டிஜிட்டல் ஊடகமாகவும் காலூன்றியுள்ளது. மகிழ்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் பரிவுள்ளவர்களாக குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோருக்கு நம்பிக்கையூட்டும் ஒற்றைக் குறிக்கோளுடன் எட்டு ஆண்டுகளாக பேரண்ட் சர்க்கிள் இயங்கி வருகிறது.

பெற்றோர் தன்னம்பிக்கை உடையவராக உருவாக வேண்டுமென்றால் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவுப் பிணைப்பு பலமாக இருக்கவேண்டும் என்று பேரண்ட் சர்க்கிள் நம்புகிறது. அத்தகைய பிணைப்பு ஏற்படும்போதுதான் தங்களுக்கு அன்பு, புரிதல், பாதுகாப்பு ஆகியவை கிடைப்பதாகப் பிள்ளைகள் உணர்வர்.

தற்போது பேரண்ட் சர்க்கிள், செல்லமே  இதழ்களுக்கு சுமார் 1.5 லட்சம் வாசகர்கள் உள்ளனர். பேரண்ட் சர்க்கிளின் இணையதள வாசகர்கள் ஆண்டுக்கு 1 கோடியே 50 லட்சம் பேர் ஆவர். உலக அளவில் புகழ்பெற்ற குழந்தை வளர்ப்பு துறை வல்லுநர்கள், புகழ்பெற்ற நூல்களின் ஆசிரியர்களை பேரண்ட் சர்க்கிள் உள்ளடக்கியிருக்கிறது. இதுதவிர, பெற்றோர், கார்ப்பரேட் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் ஆகியோருக்கு சம்பந்தமான பயிற்சி வகுப்புகளை பேரண்ட் சர்க்கிள் நடத்திவருகிறது. கடந்த 2019 நவம்பரில் எமது #GadgetFreeHour பிரச்சாரம், உலகாளவிய கவன ஈர்ப்பைப் பெற்றது.

More For You

More for you

We are unable to find the articles you are looking for.