வைட்டமின் - D ஏன் முக்கியம்?

குழந்தைகளை தினமும் காலை நேரத்தில் ஓரு சில நிமிடங்கள் வெயிலில் காட்டச் சொல்வது ஏன் தெரியுமா?

By திவ்யா சாய்நாதன்  • 5 min read

வைட்டமின் - D ஏன் முக்கியம்?

மற்ற நாடுகளைக் காட்டிலும் வைட்டமின். சத்து குறைவு இந்தியாவில்தான் அதிகமாகக் காணப்படுகிறது. உங்கள் குழந்தைகளிடத்தில் வைட்டமின் டி அளவு சரியாக இருக்கிறதா என்பதை எப்படி அறிந்து கொள்வது?

ஷாமிலி, 17 மாதங்கள் மட்டுமே நிறைந்த தன் மகள் நடப்பதற்கும் ஏறுவதற்கும் திண்டாடுவதைக் கண்டார். அவள் லேசாக சுறுசுறுப்புடன் இருப்பதுபோல் தோன்றினாலும் நடக்கும்போது அடிக்கடி தடுமாறினாள். அதேபோல் மேலே ஏறவும் கீழே இறங்க முயற்சிக்கும்போதும் முணுமுணுப்பாள். அவளது முழங்காலுக்குக் கீழே கால்கள் வளைந்து காணப்பட்டன. ஷாமிலி, இந்த வளைவு ஒருசில மாதங்களில் நேராகிவிடும் என்று நினைத்தார். ஆனால், வளைவு மேலும் அதிகரிக்கவே செய்தது. குழந்தையின் சுறுசுறுப்பான, விளையாட்டுத்தனமான நடவடிக்கைகள் எல்லாமே குறைந்துபோய் பெரும்பாலும் முணுமுணுப்பை மட்டுமே கேட்க முடிந்தது.

மருத்துவரை அணுக வேண்டிய நேரம் அது என்பதை உணர்ந்தார் ஷாமிலி. ஒரு சில சோதனைகள் செய்தபின் அவரது மகளுக்கு வைட்டமின் டி சத்து மிகவும் குறைவாக இருப்பது மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அக்குழந்தைக்கு வைட்டமின் டி சப்ளிமெண்ட் வழங்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, ஒரு சில நாட்களில் அந்தக் குட்டிப்பெண் தனது வழக்கமான செயல்பாட்டுக்குத் திரும்பி வந்துவிட்டாள்.

ஷாமிலியின் இந்த அனுபவம் பொதுவான ஒன்றுதான். கடந்த ஆண்டு ‘ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அமைப்பு, வைட்டமின் டி குறைபாடு குறித்த ஆய்வு ஒன்றை இந்தியாவில் மேற்கொண்டது. இந்த ஆய்வில் 40 விழுக்காட்டிலிருந்து 99 விழுக்காடுவரை வைட்டமின் குறைபாடு இந்தியாவில் இருப்பது கண்டறியப்பட்டது. இது இந்தியாவில் மட்டுமன்று. உலகம் முழுவதும் ஒரு தொற்று நோய்போல் பரவியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

பெரும்பாலான மக்கள் இந்த வைட்டமின் குறைவால் பாதிக்கப்படுகின்றனர் என்று சொல்லப்பட்டாலும் சிறு குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் ஆகியோர்தான் அதிகப்படியாக பாதிப்புக்குள்ளாகின்றனர்.

வைட்டமின் - D ஏன் முக்கியம்?
வைட்டமின் - D ஏன் முக்கியம்?
வைட்டமின் - D ஏன் முக்கியம்?
வைட்டமின் - D ஏன் முக்கியம்?
வைட்டமின் - D ஏன் முக்கியம்?
வைட்டமின் - D ஏன் முக்கியம்?
வைட்டமின் - D ஏன் முக்கியம்?
வைட்டமின் - D ஏன் முக்கியம்?

வைட்டமின் டி குறைபாடு என்பது நம் தலைமுறையின் தொற்றுநோயாகும். இது பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுதான். நம் வாழ்க்கைத் தரத்தை முறையாகப் பராமரிப்பதன் மூலம் இதனைத் தடுக்க முடியும். எனவே, வைட்டமின் டி குறைவதற்கான அறிகுறிகளை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளை வெளியில் விளையாட விடுவதன் மூலம் இயற்கையாகவே அவர்களுக்கு வைட்டமின் டி சத்து கிடைக்க வழி செய்யுங்கள்.