கொரொனா: குழந்தைகளை காப்பது எப்படி?

மொத்த உலகையும் அச்சத்தின் உச்சத்தில் கொண்டுபோய் நிற்கவைத்திருக்கிறது கொரோனாவைரஸ் என்ற இந்த கொடிய நோய். இதுகுறித்து பெற்றொர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள் இவை.

By மருத்துவர்.ஷ்யாம் குமார்  • 12 min read

கொரொனா: குழந்தைகளை காப்பது எப்படி?

மொத்த உலகையும் அச்சத்தின் உச்சத்தில் கொண்டுபோய் நிற்கவைத்திருக்கிறது கொரொனா வைரஸ் என்ற இந்த கொடிய நோய். இந்தியாவில் இருக்கும் பெற்றோர் தம் குடும்பத்தையும் குழந்தைகளையும் எப்படி காத்துக்கொள்ளலாம்? உங்களுக்கான பயனுள்ள தகவல்களை இக்கட்டுரையின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். வாருங்கள் கட்டுரையில் பயணிக்கலாம்…

உலக சுகாதார அமைப்பு  வெளியிட்டிருக்கும் சமீபத்திய தகவல்கள்:

சைனாவின் வூஹானில் உள்ள ஒரு கடல் உணவுச் சந்தையிலிருந்து வெளிவந்திருக்கும் இந்த SARS-Cov-2 என்ற வைரஸினால் 8657பேர் மரணமடைந்திருக்கின்றனர். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி கிட்டத்தட்ட 2,07,860 பேர் இந்த வைரஸினால் பாதிப்புக்கு உள்ளாயிருக்கின்றனர் (19ஆம் தேதி மார்ச் 2020)

வைரஸ்களை வகைபிரித்தல் தொடர்பான சர்வதேச குழு (The International committee on taxonomy of Viruses (ICTV)) இந்த வைரஸ் காரணமாக வரும் நோய்க்கு ‘சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சின்ட்ரோம் கொரோனாவைரஸ் 2 ‘ (Severe Acute Respiratory Syndrome coronavirus 2(SARS-CoV-2)) என்று பெயரிட்டுள்ளது

இந்தியாவில் கொரொனா வைரஸ்

இந்தியாவில் இதுவரை 151 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக சுகாதார மைய அறிக்கையின் அடிப்படையில் இதுவரை 3 பேர் மரணமடைந்துள்ளனர் (தற்போது இந்த எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருக்கிறது). 

விமானநிலையங்கள், ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் அனைவரிடமும் அவர்கள் எங்கிருந்து வருகின்றனர்?, அவர்களுடன் பயணம் செய்த தனிப்பட்ட நபர்களுடனான தொடர்பு?, வேறு எங்கெல்லாம் சென்றனர்?- என அவர்களது பயணம் குறித்த அனைத்துத் தகவல்களும் விசாரிக்கப்படுகின்றன.

24 மணிநேரமும் சேவை செய்யும் தொலைபேசி எண்களையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. (+91-11-23978046 அல்லது 1075). இந்த எண்களில் எந்த நேரமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் மக்கள் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம்.

அத்துடன் வெளிநாட்டுக்கு பயணம் செய்வதையும் ஓர் இடத்தில் கூட்டமாக மக்கள் கூடுவதையும் அரசாங்கம் தடை செய்துள்ளது. நோய் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு அனைவரும் அவரவர் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும் அறிவுறுத்தி வருகிறது.

கொரொனா: சில கேள்விகளும் பதில்களும்

2020 ஜனவரி 30ஆம் தேதி அன்று உலக சுகாதார அமைப்பு புதிய கொரொனா  வைரஸின் வெளிப்பாடு குறித்தும் உலக அளவில் அவசரநிலையையும் அறிவித்தது.

உலகில் 166 நாடுகளுக்கும் மேல் இந்த COVID-19 பரவிவருக்கின்ற நிலையில் உலக சுகாதார அமைப்பு இந்த நோய் குறித்த கட்டுக்கதைகளையும் குழப்பங்களையும் போக்க தகவல்களை வெளியிட்டுள்ளது.

கொரொனா  வைரஸ் தொற்று மற்றும் அது தொடர்பான கேள்வி பதில்கள்

1. ஆன்டிபயாட்டிக்ஸ் இந்த நோய்த்தொற்று வராமல் பாதுகாக்குமா?

ஆன்டிபயாட்டிக்ஸ், பாக்டீரியாவினால் ஏற்படும் நோயிலிருந்து காப்பதற்குத்தானே தவிர வைரஸிலிருந்து அல்ல. COVID-19 என்பது SARS-CoV-2 என்ற வைரஸ்ஸால் ஏற்பட்டது. ஆக, ஆன்டிபயாட்டிக்ஸ் கொரொனா வைரஸ் நோய்க்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. எனினும் நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது பாக்டீரியல் இணை நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ஆன்டிபயாட்டிக்ஸ் வழங்கப்படலாம்.


2. உடல் முழுவதும் ஆல்கஹால் அல்லது குளோரின் தெளிப்பதால் பயனுண்டா?

இது ஒரு பயனுள்ள நடவடிக்கை இல்லை என்பதால் பரிந்துரைக்கப்படுவதில்லை. இந்த இரண்டும் தரைகளில் உள்ள கிருமிகளை நீக்கம் செய்யப் பயன்படுத்தலாம் என்றாலும், உடலில் ஏற்கனவே நுழைந்துவிட்ட வைரஸ்களை இவற்றால் கொல்ல முடியாது. தவிர ஆல்கஹால், குளோரின் இரண்டுமே வாய் மற்றும் கண்களின் மிக மென்மையான சவ்வுகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை.

3. புதிதாக உருவாகியிருக்கும் கொரொனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுவதற்கென குறிப்பிட்ட மருந்து மாத்திரைகள் ஏதேனும் இருக்கின்றனவா?

தற்போது புதிதாக உருவாகியிருக்கும் SARS-CoV-2 நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க தனிப்பட்ட மருந்தோ அல்லது தடுப்பூசியோ இல்லை. இருப்பினும் அறிகுறிகளைப் போக்கவும், தீவிரமாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் உரிய கவனிப்பு தேவைப்படுகிறது.

4.  கொரொனா வைரஸ் வயதானவர்களைத்தான் பெரிதும் தாக்குமா?

கொரொனா வைரஸ் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வரக்கூடியதுதான். ஆனால், ஏற்கனவே ஆஸ்துமா, நீரிழிவுநோய் அல்லது இதய நோய் போன்ற நோய்களைக் கொண்ட வயதானவர்களுக்கு இதில் ஆபத்து அதிகம்.

5.  கொரொனா  வைரஸைத் தடுக்கும் தன்மை பூண்டுக்கு இருக்கிறதா?

பூண்டு தன்னுள்ளே கொண்டுள்ள ஆண்டிமைக்ரோபியல் என்ற பண்புக்கு நன்கு அறியப்பட்டதுதான். இருப்பினும், பூண்டு சாப்பிடுவதாலோ பூண்டை வைத்துத் தயாரிக்கும் பொருட்களைச் சாப்பிடுவதன் மூலமாகவோ இந்தக் வைரஸைக் குணப்படுத்தலாம் என்று எந்த அறிக்கையும் இல்லை. எந்த அறிகுறியும் இல்லை.

6. கைகளைக் காயவைக்கும் (hand dryers) ஹேண்ட் ட்ரையரைப் பயன்படுத்தினால் இந்த வைரஸ் கொல்லப்படுமா?

இது மட்டும் போதாது. கைகளை ஆல்கஹால் கொண்ட சானிடைசர் அல்லது சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதன்பின்னர் ஒரு காகிதம் அல்லது ஹேண்ட் ட்ரையரைப் பயன்படுத்தலாம்.

7. செல்லப்பிராணிகள் கொரொனா வைரஸைப் பரவுமா?

உலக சுகாதார மையம் இதுவரை செல்லப்பிராணிகளால் மனிதர்களுக்கு கொரொனா வைரஸ் பரவியதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இருந்தபோதிலும் ஹாங்காங்கில் வீட்டில் நாய்க்குட்டியை வளர்த்துவந்த நபருக்கு இந்த கொரொனா வைரஸ் (low level) இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிஸினஸ் இன்ஸைடரில் (Business Insider) குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், செல்லப்பிராணிகளைக் கையாளும்போது பொதுவாக ஏற்படும் பாக்டீரியா நோய்த்தொற்றுகளைத் தடுக்க இயன்றவரை பாதுகாப்பான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது நல்லது.

8. சீனாவிலிருந்து வரும் அஞ்சல் அல்லது பார்சல்கள் மூலமாக கொரொனா வைரஸ் தொற்று வருமா?

பொருட்களின்மீது இந்த வைரஸ் அதிக நேரம் உயிருடன் இருப்பதில்லை என்கிறது உலக சுகாதார அமைப்பு. எனவே, புதிதாக உருவாகியிருக்கும் கொரொனா வைரஸ் சீனாவிலிருந்து வரும்  பார்சல்கள், போஸ்ட் ஆகியவற்றிலிருந்து பரவுவதில்லை.

9. மூக்கைத் தொடர்ந்து சுத்தம் (saline) செய்வதன் மூலம் இந்த வைரஸைக் கொல்ல முடியுமா?

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி இதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. இருப்பினும், இதுபோல் தொடர்ந்து சுத்தம் செய்வதன் மூலம் பொதுவாக வரும் சளித் தொல்லையின் அறிகுறியிலிருந்தே விரைவில் வெளியில் வரலாம்.


10. நல்லெண்ணெயை உடலில் தேய்த்துக் கொள்வதன்மூலம் இந்த வைரஸைக் கொல்ல முடியுமா?

முடியாது. குளோரினைக் கொண்ட கிருமி நாசினிகள், 75 விழுக்காடு எத்தனால், பெராசெடிக் அமிலம் மற்றும் க்ளோரோஃபார்ம் போன்ற கிருமி நாசினிகளால் மட்டுமே அசுத்தமான தரையில் இருக்கும் வைரஸைக் கொல்ல முடியும். இவை தீங்கு விளைவிக்கக்கூடியவை என்பதால் சருமத்தில் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுவதில்லை.

11. தனிப்பட்ட மனிதன் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதை தெர்மல் ஸ்கேனரால் மிகச் சரியாக அடையாளம் காண முடியுமா?

ஒருவருக்கு உடலில் வழக்கத்தைவிட அதிகபட்ச சூடு இருப்பதை மட்டுமே இந்த தெர்மல் ஸ்கேனரால் கண்டுபிடிக்க முடியும். காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டபின், குறிப்பிட்ட ஒருசில சோதனைகள் செய்யப்பட்டபின்தான் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்படும். அதேபோல் புதிய வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு காய்ச்சல் இல்லாமலும் இருக்கலாம். ஆனால், இந்த வைரஸின் பாதிப்புக்கான அறிகுறிகள் ஒரு சில நாட்களுக்குப் பின்னர் தெரியவரலாம். எனவே தெர்மல் ஸ்கேனரால் இந்த நோய்த்தொற்று குறித்து மிகச் சரியாக எதையும் குறிப்பிட்டு சொல்ல இயலாது.

12. அல்ட்ரா வயலட் டிஸ்இன்ஃபெக்க்ஷன் விளக்கைப் (ultraviolet disinfection (UV)) பயன்படுத்துவதன் மூலம் SARS- CoV- 2 கொரோனாவைரஸைக் கொல்ல முடியுமா?

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி இந்த விளக்கை பயன்படுத்துவது அந்த அளவுக்கு பாதுகாப்பானது அல்ல. இந்த விளக்கிலிருந்து வெளிவரும் யுவி கதிர்கள் வெவ்வேறுவிதமான உடல் பிரச்சனைகளுக்குக் குறிப்பாக தோல் புற்றுநோய் வர காரணமாகிறது.

13. நிமோனியாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கொரொனா வைரஸூக்கு எதிராகப் போராடுமா?

நியூமோகாக்கல் தடுப்பூசி மற்றும் ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை பி (ஹிப்)தடுப்பூசி ஆகியவை புதிய கொரோனாவைரஸூக்கு எதிராகப் போராட இயலாதவை. இந்த புதிய வைரஸை அழிக்க நிறைய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

கொரொனா வைரஸ் பற்றிய பிற கட்டுக் கதைகள்

மாஸ்க் அணிவதன் மூலம் கொரொனா வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்க முடியுமா?

தொழில்முறை சார்ந்த சுகாதார ஊழியர்களால் பயப்டுத்தப்படும் N95 போன்ற இறுக்கமான மாஸ்க்குகள் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். இருப்பினும் பொதுமக்கள் அதுபோன்ற மாஸ்க்குகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அசுத்தமான கைகளால் மாஸ்கை சரி செய்தாலோ, வாயை அல்லது முகத்தைத் தொட்டாலோ இந்த வைரஸ் பரவும்.

கொரொனா வைரஸ் சாதாரண சளித் தொல்லையின் பிறழ்ந்த நிலையா?

இது முற்றிலும் புதிய வைரஸ். சாதாரண சளித்தொல்லை போலன்றி விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரப்பப்பட்டதாக இருக்கலாம்.

குழந்தைகளுக்கு வைரஸ் நோய்த் தொற்று வராதா?

தொடக்ககால புள்ளிவிவரங்களைப் பார்த்தால் பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைகளிடத்தில் இந்த வைரஸின் தாக்கம் மிகவும் குறைவுதான். CPVID-19 வைரஸினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிகவும் குறைவே. ஆனால் இதற்கான காரணம் இன்றுவரை விஞ்ஞானிகளுக்கே தெரியவில்லை.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி கொரோனாவைரஸின் அறிகுறிகள்

• அதிகபட்ச காய்ச்சல்

• மூச்சுவிடுவதில் பிரச்சனை

• இரண்டு நுரையீரல்களிலும் புண் ஏற்படுவது

இவை தவிர பொதுவான அறிகுறிகள்

• குளிராக உணர்வது

• மைல்ட் டூ மாடரேட் அப்பர் ரெஸ்பரேடரி ட்ராக்ட்(Mild to moderate upper respiratory tract)

• தலைவலி

• இருமல்

• சோர்வு

• தசைகளில் வலி

• தொண்டை காய்ந்துபோதல்

• ஏற்கனவே நோய்த்தொற்றுள்ள பொருட்களை அல்லது இடங்களைத் தொடும்போது ஒருசில தனிநபர்களுக்கு நிமோனியாவாக வளரவும், கடுமையான சுவாச நோய்க்கான அறிகுறியாக, சிறுநீரக செயலிழப்பு மற்றும் ஒருசிலர் இறக்கவும் கூடும்.

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காத்துக் கொள்வது எப்படி?

சீனாவில் மட்டும் இந்த வைரஸால் 3200க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகிவிட்டனர். அதேபோல் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா, தாய்வான் மற்றும் அமெரிக்காவிலிருந்தும்கூட பலர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த நோய்த்தொற்றிலிருந்து காத்துக் கொள்ள

• சாதாரன சளி பிரச்சனைக்கான அறிகுறி உள்ளவர்களிடம் நெருக்கமாகப் பழகுவதைத் தவிர்க்கவும்.

• உங்கள் கைகளை சோப்பு அல்லது ஆல்கஹால் கொண்ட ஹேண்ட் வாஷ் கொண்ட குறைந்தபட்சம் 20 நொடிகளாவது நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள்.

• கைகளைக் கழுவுவதற்கு முன் கண்கள், மூக்கு அல்லது முகம் ஆகியவற்றைக் எக்காரணம் கொண்டும் தொடவேண்டாம்

• எந்தவிதமான விலங்கினங்களையும் தொடவேண்டாம். அதேபோல் இவை தொடர்பான சந்தைகளுக்குச் செல்வதையும் தவிர்த்திடுங்கள்.

உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் குழந்தைகளையும் பாதுகாப்பதுதான் உங்களது மிக முக்கியமான கவலை என்றால், இந்த நோய் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பது மட்டுமல்லாத தனிப்பட்ட சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுவதே நல்லது.

(தமிழில்: சுகுணா ஸ்ரீனிவாசன்)

More for you

கொரொனா யுகத்தில் பழங்கள் காய்கறிகளும்

காய்கறிகள் மற்றும் பழங்களை கழுவுதல் குடும்பத்தில் கொரொனா நோய்தொற்றைத் தடுக்க உதவுமா?


மருத்துவர் ஷ்யாம் குமார் (தமிழில்:சுகுணா ஸ்ரீனிவாசன்)  • 6 min read

கொரொனா கால நிதி நிர்வாகம்

கொரொனா கால ஊரடங்கு பலரையும் ஒரு பொருளாதார ரீதியில் பதம் பார்த்திருக்கிறது. இச்சூழலில் ஒவ்வொரு குடும்பத்திலும் ...


சு.கவிதா  • 13 min read

எப்போது பள்ளிகள் திறக்கும்? நாட்டின் முன்னணி கல்வி ...

கோவிட் பெருந்தொற்றுக்குப்பிறகு பள்ளிகள் எப்போது திறக்கும், எதிர்கால சவால்கள் என்னென்ன என்று நாட்டின் முன்னணி கல்வியாள...


செல்லமே குழு  • 12 min read

How To Prepare For Life After Lockdown

How to adapt to the post lockdown state? What psychological adjustments will families need to do?...


Dr Ananya Sinha  • 17 min read